Header Ads



"ஜனாதிபதியின் காலை பிடித்து இழுக்காது, அவருக்கு 100 வீதம் ஆதரவை வழங்குவோம்"


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மீது நம்பிக்கையின்றி அவரது வேலைத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் தடையை ஏற்படுத்தும் சிலர் அரசாங்கத்தில் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தை விமர்சித்தால், பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்களுக்கு எதிராக பதில் தாக்குதலை நடத்த நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாத்தளை - நாவுல பிரதேசத்தில் நேற்று -29- செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஜனாதிபதியை 5 ஆண்டுகளுக்காக தெரிவு செய்துள்ளோம். அவரது வேலைத்திட்டங்கள் குறித்து எமக்கு பொறுப்புடன் கூறியுள்ளார். அவர் மீது எமக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. எதிர்பார்ப்புள்ளது.

அவரது காலை பிடித்து இழுக்காது அவருக்கு பணியாற்ற சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் பணியை ஒரு தரப்பினரால் செய்ய முடியாது.

தற்போது நாட்டில் உள்ள எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது. எதிர்க்கட்சியின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. எதிர்க்கட்சியின் பணியை ஆளும் கட்சியில் இருக்கும் சில் செய்ய முயற்சிப்பது பொருத்தமற்றது.

பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நாங்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு 100 வீதம் ஆதரவை வழங்குவோம்.

அவருக்கு வழங்க வேண்டிய ஆதவை வழங்குவோம் பிரமித பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ஜப்னா முஸ்லீம்:உங்களின் வாசகர்களின் பழைய வாசகர்கள் நிறைய பேர் உண்டு அதில் நானும் ஒருவன் நீங்கள் கட்டுரைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கருத்து பதிவு செய்பவர்களுக்கும் கொடுக்கணும்!அதுதான் ஊடக தர்மம் வாசகரின் கருத்துக்கள் நிராகரிக்க படுமென்றால் கட்டுரை பதிய கூடாது ஒருவர் சமூகத்துக்கும் இனத்துக்கும் செய்யப்பட்ட அநியாயத்தை நியாய படுத்தி கருத்து சொன்னால் அதட்கு எதிர் கருத்து சொல்ல இடமளிக்க வேண்டும் நான் இங்கு சொல்ல வரும் விடயம் நூர் நிசாம்(Noor Nizam)என்று ஒரு பைத்தியக்காரன் கருத்து சொல்வான் அவன் கருத்து அநேகமான வாசகர்களுக்கு கோபத்தையும் எரிச்சலையும் ஏட்படுத்தும் இது உங்களுக்கும் நன்கு தெரியும் அவன் சொல்லும் கருத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் நீங்கள் ஏன் அதட்கு எதிர் கருத்து சொல்லும் வாசகர்களின் கருத்தை நிராகரிக்கிறீங்கள்?அவன் கருத்துக்கு எதிர் கருத்து சொல்கிற எல்லாம் வாசகர் கருத்தை அதிகமான தடவை நீங்கள் பதியவில்லை இத்தனைக்கும் நீங்கள் பத்து வருடத்துக்கு மேல் செய்கின்ற சேவை வெற்றிகரமாக போக வாசகர்கள் தான் என்று சொல்கிறீர்கள் அந்த நூர் நிசாம்(Noor Nizam) ஒன்று உங்கள் ஊர் யாழ்ப்பாணம் ஆக இருக்கனும்,இல்லை உங்கள் உறவினர்,நண்பராக இருக்கனும் அதுதான் அவன் அரசுக்கு கூஜா தூக்கி ஜனாசா எரித்தது சரி என்று சொல்வது போல் கருத்து சொன்னாலும் நீங்கள் அவன் சொல்வதுக்கு அதிகம் முக்கியம் கொடுக்குறீங்க இதுவா உங்கள் ஊடக தர்மம்?

    ReplyDelete

Powered by Blogger.