Header Ads



WhatsApp - Facebook வீரர்களாக மாறுவதை விட்டு, சமூகத்திற்காக படைத்தவனிடம் குரல் கொடுக்கும் வீரர்களாக மாறுவோம்


*தெரண, ஹிரு தான் முஸ்லீம் சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களா?*

எமது சமூகத்தை குட்டிச்சுவராக்கி இனவாதத்தை கக்கி முஸ்லீம் சமூகத்தை இந்த நாட்டிலிருந்து முகவரியில்லாமல் பூண்டோடு அழிக்க சதித்திட்டம் தீட்டும் இந்த (ஹிரு, தெரண) தீய சக்திகளின் செய்திகளையா துரித கதியில் நம்புகின்றோம்!

ரிஸ்வி முப்தி ஜனாதிபதி ஆனைக்குழுவிற்கு வட்டிலாப்பம்.......

என்ற இனவாத ஊடகங்களின் செய்தியை ஏற்று, சமூக வலைத்தளங்களில் எமது தலைமைத்துவத்தை நாமே விமர்சித்து சீறிப்பாயும் காட்சியை அவர்கள் பார்த்து எள்ளிநகையாடுகின்றனர்.

எமக்கு ஒரு வெட்கம் இல்லையா?

நடந்தது என்ன? என்ற உண்மைத் தகவளை யாரும் அறியாமல் நமக்குள்ளே இந்த வீன் வம்பு..

20 நாள் பச்சிளம் பாலகனை எரியூட்டிய விவகாரத்தை மறைக்க விசமிகளின் புதிய நாடகமோ இது?

தெரண, ஹிரு இவை இரண்டும் முஸ்லீம் சமூகத்திற்கெதிரான கைக்கூலிகள். பணம் வழங்கப்பட்டு இயக்கப்படுகின்றன என்பதை எமது கடந்த கால நிகழ்வுகள் பதில் சொல்கின்றன.

அடுத்து முஸ்லீம் சமூகத்திற்கும் தலைமைத்துவத்திற்குமிடையில் வெறுப்புணர்வையும் இடைவெளியையும் உண்டு பண்ண முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளே இருக்கும் பசுத்தோல் போர்த்திய புலி கலை போன்ற ஓர் கூட்டத்தின் சதித் திட்டமாகவும் அமையலாம்.

வலைகளில் சிக்காமல் விழிப்புடன் செயற்படுவோம்.

WhatsApp, Facebook வீரர்களாக மாறுவதை விட்டும் தஹஜ்ஜுத் வேளையில் சமூகத்திற்காக படைத்தவனிடம் குரல் கொடுக்கும் வீரர்களாக மாறுவோம்.

இப்னு ஸைபுல்லாஹ்

11/12/2020

3 comments:

  1. உண்மையான விளக்கம். சிறுபான்மையினர் மத்தியில் கட்டுக்கோப்பான ஏற்பாடுகள் இருப்பது ஆட்சி புரிபவர்கள் யாருக்கும் பிடிக்காது. பிரித்து வைப்பதற்கான பெருமபங்கினை செய்தி ஊடகங்கள் செய்கின்றன. ஏதாவது ஒரு புள்ளியில் சிறுபான்மையினர் ஒருமித்து செயற்படும் சிறு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி விட்டால் போதும் அதிர்ந்து போய்விடுவார்கள். நடக்குமா?

    ReplyDelete
  2. சிறந்த பதிவு

    ReplyDelete
  3. Ok you tell us actually what happened?? Tell us the TRUTH.

    ReplyDelete

Powered by Blogger.