Header Ads



கேகாலையில் திரண்டுள்ள மக்களால் கொரோனா பரவக்கூடும் – சுகாதார பரிசோதகர்கள் சங்கம்


கேகாலையில் ஆயுர்வேத வைத்தியரிடம் மருந்தினை பெறுவதற்காக பெருமளவு மக்கள் காணப்படுவதால் கொரோனா பரவும் ஆபத்துள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இவ்வாறு மக்கள் பெருமளவில் ஒரு பகுதியில் அதிகளவில் காணப்பட்டால் அதனால் ஆபத்து உருவாகலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இவ்வாறு பெருமளவில் ஒரு இடத்தில் காணப்படுவது கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறும் நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஇடங்களில் பெருமளவு காணப்படுவதால் பாரிய அளவிலான கொரோனா வைரஸ்பரவும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கேகாலையில் ஆயுர்வேத மருத்துவரின் வீட்டின் முன்னாள் காணப்படுபவர்கள் மத்தியில் ஒரு நோயாளி காணப்பட்டாலும் போதியளவு சமூகவிலக்கல் இன்மையால் பெருமளவானவர்கள் பாதிக்கப்படலாம் என பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆயுர்வேத மருந்தினை பெறுவதற்கான முயற்சியின் போது தெரியாமலே ஆரோக்கியமான நிலையில் உள்ள ஒருவர் நோயாளியாகும் ஆபத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காரணங்களால் பாரிய நோய் தொற்று ஏற்பட்டுநாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் ஆபத்து ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ஒருவர் தான் தயாரித்துள்ள ஆயுர்வேத மருந்து கொரோனாவை குணப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் அவரிடமிருந்து மருந்தினை பெறுவதற்கு கேகாலையில் உள்ள ஹெட்டிமுல்ல என்ற பகுதியில் காணப்படுகின்றனர்.

No comments

Powered by Blogger.