Header Ads



சம்மாந்துறை ஜனாஸாவை ஒரு, ஆய்வுக்கான மாதிரியாக்கி அடக்க அனுமதியுங்களேன்...!


- ஆப்தீன் சுபைதீன் -

கிழக்கு மாகாணத்தில் கொறோணாத் தொற்றினால் இறப்பு நிகழ்ந்ததாக சொல்லப்படுகின்ற சம்மாந்துறையைச் சேர்ந்த வயது முதிர்ந்த சகோதரரின் ஜனாஸாவை ஒரு ஆய்வுக்கான மாதிரியாகக் கொண்டு (Sample) அடக்கம் செய்ய அனுமதி வழங்குங்கள்.

இந்த அடக்கத்தினால் நிலக் கீழ் நீரூற்று மாசடைகின்றதா? அல்லது மாசடையவில்லையா? என்பதனை அவ்வடக்கம் செய்யப்பட்ட பிரதேசத்திலுள்ள மக்கள் மத்தியில் கொறோணா பரவும் நிலைமை அல்லது அதன் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட நீரைப் பரிசோதனை செய்வதன் மூலம் (ஆய்வில் வெளிப்படைத்தன்மை அவசியம்) ஒரு நிலையான முடிவிற்கு வரமுடியும்தானே.

இதற்கு தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம், சமூகவியல் பிரிவு, புவியியல் பிரிவு மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றிலுள்ள துறைசார் கல்வியிலாளர்கள் இணைந்து இவ்வாய்வை மேற்கொள்ள முடியும்.

அல்லது வெளிநாடுகளில் கொறோணா ஜனாஸாக்களை அடக்கம் செய்யப்பட்ட  நாடுகளின் இதுவரையான அனுபவத்தை கேட்டறிந்து ஒரு நிலையான முடிவிற்கு வரமுடியும்.

இவ்வாறான ஒரு அறிவார்ந்த முயற்சிக்கு, அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்


3 comments:

  1. May Allah give us patiences and make us establish prayer to him alone.
    Dear brothers and sisters, hope thise authority has a bit of humanity in their hearts to consider WHO recommendation. But if their hearts are locked with hate and racism,,, No research will help them till they clean their hearts from dirty inhuman feelings toward minority in this country.
    They carry a peaceful philosophy (buddism) but the problem is that, at present they do not practice Buddism. They only practice racism and political selfishness.

    Allah will help us soon.

    Let us ask his help via patiences and prayers.

    ReplyDelete
  2. If the government has genuine interest then they should implement this request but they have racist agenda then they will never consider.

    ReplyDelete
  3. இந்த கோரிக்கை வெறுமனே ஊடகத்தில் மட்டும் போடப்பட்ட நிலையில் உள்ளதா அல்லது சம்பந்தப்பட்டவர்களிடம் அதாவது அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா?

    ReplyDelete

Powered by Blogger.