ஈஸ்வதினி பிரதமர், கொரோனா தொற்றால் பலி
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான ஈஸ்வதினியின் பிரதமர் அம்ப்ரோஸ் டிலாமினி, கொரோனா தொற்றினால் தனது 52 ஆவது வயதில் காலமானார்.
நான்கு வாரங்களுக்கு முன்பு கொவிட் -19 க்கு சாதகமாக பரிசோதித்த அம்ப்ரோஸ் டிலாமினி, அண்டை நாடான தென்னாபிரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக ஈஸ்வதினி அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தாமதமாக அறிவித்துள்ளது.
டிலாமினி நவம்பர் மாத நடுப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக டிசம்பர் முதலாம் திகதி தென்னாபிரிக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந் நிலையிலேயே அவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
1.2 மில்லியன் சனத் தொகையை கொண்ட ஈஸ்வதினி இராஜ்ஜியத்தில் 6,700 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 127 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment