Header Ads



கிழக்கு மாகாணத்தில் கொரோனாவுக்கு, முதல் வபாத் சம்பவம் - உடலை ஏற்பதில் பின்னடிப்புச்செய்த சில வைத்தியசாலைகள்


கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதான ஆண் ஒருவர் மரணித்துள்ளார். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையான லதாகரன் இதனைத் தெரி வித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார் என கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எப். ரஹ்மான் ‘மெட்ரோ நியூஸ்’ இணையத்துக்குத் தெரிவித்தார். சம்மாந்துறையைச் நேர்ந்த 80 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்தவராவார்.

இவர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நேற்று (10) இரவு முல்லேரியா ஐடிஎச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதே உயிரிழ்ந்துள்ளார்.

முல்லேரியா ஐடிஎச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும்போது இவர் உயிரிழந்த நிலையில், அவர் மரணமடைந்த பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளில் சடலத்தை கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டபோதும் அந்த வைத்தியசாலைகள் சடலத்தை ஏற்றுக் கொள்ளாமை காரணமாக மீண்டும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கே கொண்டு வரப்பட்டது.

இதேவேளை, இந்த கொவிட் மரணம் தொடர்பில் சுகாதாரத்துறையினருக்கும் பிராந்திய சுகாதாரப் பிரிவினருக்கும் நாம் அறிவித்துள்ளோம். எனவே கட்ட நடவடிக்கை தொடர்பில் அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எப். ரஹ்மான் ‘மெட்ரோ நியூஸ்’ இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.