கொழும்பில் நாளுக்கு நாள் அதிகளவு தொற்றாளர்கள்
கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14,107 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகளவு தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர். இதற்கமைய, நேற்று மாத்திரம் 397 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் பொரலை பகுதியில் 60 பேரும், மட்டக்குளியில் 46 பேரும், தெமட்டகொட பகுதியில் 36 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொழும்பிலுள்ள தொடர்மாடி குடியிருப்புகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளபோதிலும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment