Header Ads



ஊழலையும் வீண்விரயத்தையும் ஒழிப்பது எனது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாக நான் கருதுகிறேன் - ஜனாதிபதி


2020 டிசம்பர் 9 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி

ஊழல் என்பது அபிவிருத்திக்கு மிகப்பெரிய தடையாகும், அது சமூக அல்லது பொருளாதார தளமாக இருப்பினும் சரியே. ஊழலானது நிறுவனங்கள் அவற்றின் அதிகபட்ச திறனை அடைவதைத் தடுத்து இறுதியில் ஒரு நாட்டின் வளர்ச்சியையே தடுத்துவிடுகிறது. கண்காணிப்பு பொறிமுறைகளில் உள்ள குறைபாடுகளின் காரணமாக தேவையற்ற சுரண்டல்களுக்கு இடமளிக்கும் நெருக்கடியான காலகட்டங்களில் இதனை மிகத் தெளிவாக காணலாம்.

ஒரு நாட்டின் குடிமக்கள் இந்த வெறுக்கத்தக்க நடைமுறையை எதிர்த்துப் போராடும் உணர்வையும் மனவிருப்பத்தையும் கொண்டிருக்கும்போது அந்த நாடு ஊழலை சிறப்பாக எதிர்த்துப் போராட முடியும். பிரஜைகள் ஊழலை சகித்துக்கொள்ளாதிருப்பதானது அதனை தடுப்பதற்கான சிறந்த பரிகார நடவடிக்கையாகும். எனவே தான் “சுபீடசத்தின் நோக்கு“ கொள்கைப் பிரகடனத்தில் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் பொதுமக்களை வலுவூட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஊழலையும் வீண்விரயத்தையும் ஒழிப்பது எனது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாக நான் கருதுகிறேன்.

இலங்கை மக்கள் பெரும்பான்மை பலத்துடன் எனது வெற்றியை ஆதரித்தபோது ஊழல் இல்லாத ஒரு வினைத்திறனான நாட்டிற்கான தங்களது விருப்பத்தையும் வலுவான ஆதரவையும் வெளிப்படுத்தினர். அரசாங்க சேவைகளை திறம்பட பெறுவதற்கான உங்களது உரிமைகள் பற்றி அதிகம் அறிந்திருக்கவும் எந்தவடிவிலான இலஞ்ச கோரிக்கைகளுக்கும் உட்படுவதை எதிர்க்கவும் அரசாங்கத்தின் நிர்வாக பொறிமுறைகளில் அதிக பங்கேற்பு மற்றும் செயல்திறன் மிக்க பாத்திரத்தை வகிப்பதற்கு எமது நாட்டின் பிரஜைகளை நான் அழைக்கின்றேன்.

உங்கள் மீதான அரசாங்கத்தின் கடப்பாடுகள் குறித்து அதிக விழிப்புடன் இருக்கும்படியும் இலஞ்சம் ஊழல் பற்றிய எந்தவொரு சம்பவத்தையும் சட்ட அமுலாக்க அல்லது விசாரணைசெய்யும் அதிகாரத் தரப்பிற்கு உடனடியாக அறிவிப்பதன் மூலம் உங்கள் குடிமக்கள் கடமையைச் செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன். தடுப்புப் பொறிமுறையில் குடிமக்கள் ஒரு பிரக்ஞைபூர்வமான பங்கைக் கொண்டிருக்கும்போது எமது நாட்டிலிருந்து இந்த அச்சுறுத்தலை ஒழிப்பது எளிதாக இருக்கும்.

ஊழல் கலாச்சாரத்திலிருந்து இந்த நாட்டை விடுவித்து எங்கள் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு சிறந்த தேசத்தை பரிசளிப்பதற்கு நாம் ஒன்றுபடுவோம்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.12.08

3 comments:

  1. ஊழல் என்பது அபிவிருத்திக்கு மிகவும் தடையாகும் என சனாதிபதி ஊடகப்பிரிவு கூறுகிறது. மிகவும் நல்லம் சேர் செய்து காட்டுங்க என நாம் கூறுகின்றோம்.

    ReplyDelete
  2. இனவாதத்தை வாழவிட்டு ஏனைய எந்த ஒரு அபிவிருத்தியும் , சீர்திருத்தமும் செய்யவே முடியாது . இந்த நாட்டில் இப்போது என்னதான் நடக்கிறது ???

    ReplyDelete
  3. Very Nice words. But your action in trying to dissolve the Public Utilities Commission of Sri Lanka (PUCSL) which has made immense contribution since its creation in 2002 in preventing Corruption and Waste in the Power, Water Supply, Petroleum Resources and other Sectors in the country is very puzzling.

    It seems all the Members of the PUCSL have resigned today and the good and well meaning citizens of Sri Lanka are highly worried about what will happen next.

    ReplyDelete

Powered by Blogger.