Header Ads



“நீங்கள் பீல்ட் மார்ஷல் இல்லை, அதிகளவு நார்களை உடைய தேங்காய் மார்ஷல்”


முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகாவை இனி பீல்ட் மார்ஷல் என அழைக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நாடாளுமன்றில் இன்று -09- தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மஹிந்தானந்தவின் நாடாளுமன்ற உரையின் போது இடையில் தனது கருத்தை சரத் பொன்சேகா வெளியிட்டிருந்தார்.

“இனி சரத் பொன்சேகாவை நான் பீல்ட் மார்ஷல் என விளிக்கப் போவதில்லை, மார்ஷல் என அழைப்பதனை நான் வாபஸ் பெற்றுக்கொள்கின்றேன் என மஹிந்தானந்த குறிப்பிட்டுள்ளார்.

“நீங்கள் பீல்ட் மார்ஷல் இல்லை அதிகளவு நார்களை உடைய தேங்காய் மார்ஷல்” என சரத் பொன்சேகாவை அவர் ஏளனம் செய்திருந்தார்.

மார்ஷல் என்ற தகுதியிருந்திருந்தால் ரணில் விக்ரமசிங்க செய்த ஏதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக சரத் பொன்சேகா குரல் கொடுத்திருப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாறாக ரணிலின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆமோதித்து இன்று அவரை குறை கூறுவதில் எவ்வித அர்த்தங்களும் கிடையாது என அவர் குறிபிப்பிட்டுள்ளார்.

இந்த பீல்ட் மார்ஷல் பதவியை ஒரு சிறியவனுக்கு வழங்குங்கள் அதுவே பொருத்தமானது” என மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்

    ReplyDelete
  2. For you OK???? or Naamal or Yoshitha???

    ReplyDelete

Powered by Blogger.