Header Ads



நாம் பக்குவப் பட்டேயாக வேண்டும் , காணத் தவறும் சில யதார்த்தங்கள்..!!


- சட்டத்தரணி Ajaaz Mohamed -

இன்றைக்கும்கூடக் கணிசமான பேரினப் பெண்கள் நம்மவரோடு தொடர்புகளைக் கொண்டுள்ளனர். 

மத்திய கிழக்குக்குச் செல்லும் அந்தப் பெண்களில் கணிசமானோர் அங்கும் முஸ்லிம்களோடு தொடர்புகளைக் கொண்டுள்ளனர்.

கவனத்திற் கொள்ளவேண்டிய அளவுக்கு அந்தப் பெண்கள் நம்மவரைத் திருமணம் செய்துகொண்டும் உள்ளனர். மார்க்கத்தைத் தழுவியும் உள்ளனர்.  

ஆரம்ப காலத்திலிருந்து பார்த்தாலும்கூட நமது தாய்மார்களாக அந்தப் பெண்களும் இருந்துள்ளனர். 

அந்தப் பெண்கள் நமது ஆண்கள் மீது கணிசமான அளவில் விருப்பும் வேட்கையும் கொண்டுள்ளனர். இதை நான் மிக மிக உறுதியாகச் சொல்கிறேன். 

அதற்கான காரணங்களாக, நம்மவரில் 90% க்கும் அதிகமானவர்கள் மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்வதில்லை. நன்றாகச் சாப்பிடக் கூடியவர்கள், ஆரோக்கியமானவர்கள், சிற்றின்பத்தில் நல்ல ஈடுபாடும் தேர்ச்சியும் கொண்டவர்கள். பெண்கள் மீது மதிப்பும் நேசமும் காட்டத் தெரிந்தவர்கள். அனைத்துக்கும் மேலாகத் துப்பரவானவர்கள். பெண்களுக்காகச் செலவுசெய்வதிலும் மகிழ்ச்சி அடைபவர்கள். இப்படியான காரணங்களால் அந்தப் பெண்களுக்கு நம்மை அதிகம் பிடிக்கும். 

பேரினச் சமூகத்தில் மிகப் பெரும்பாலான ஆண்கள் மதுவுக்கு அடிமையானவர்கள். அந்தப் பெண்களில் கணிசமானோர் படிப்பறிவு உள்ளவர்கள். தொழில் செய்பவர்கள், வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள். இத்தகைய காரணங்களால் பேரினச் சமூகத்தின் சனத்தொகை வளர்ச்சி வீதம் நம்மை விடவும் சற்றுக் குறைந்து வருகிறது என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டுள்ளனர். 

எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் நமது ஆண்கள்கூடப் பேரினத்தாரிடம் கூலி வேலைகளுக்குச் செல்வதேயில்லை. நமது பெண்கள் அவர்களிடம் பணிப்பெண்களாகச் செல்வதே இல்லை. நல்ல வேலைகளுக்குக்கூட நமது பெண்கள் பேரினத்தாரிடம் செல்வதில்லை. 

எந்தக் காரணத்தாலும் நமது மதக் கிரியைகளுக்காகவோ மதத் தலங்களை அமைப்பதற்காவோ பிற சமூகங்களிடம் உதவி கோருவதே இல்லை. ஒப்பீட்டளவில் நமது வணக்கத்தலங்கள் வசதியான இடங்களில் அழகிய தோற்றங்களில் காணப்படுகின்றன. 

முப்பதாண்டுகால யுத்தத்திலும் தெற்கிலான கிளர்ச்சிகளிலும் நமக்கும் இழப்புக்கள் ஏற்பட்ட போதிலும் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்ட போதிலும் ஒப்பீட்டளவில் இறப்புகள் நமக்குக் குறைவுதான் என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர். 

நகரசபைத் தொழில்கள், பொலிஸ், ராணுவம், மருத்துவமனைகளில் சிற்றூழியர் மற்றும் தாதியர் தொழில்களுக்கும் நம்மவர் செல்வது மிக மிகக் குறைவு. 

எத்தனை பொருளாதார நெருக்கடிகள் நமக்குள் இருந்தாலும் வெளிப்படையாக நாம் நன்றாகவே வாழ்கிறோம். நமது வீடுகள் நன்றாகவே உள்ளன. வாகனங்கள், கல்விக்கூடங்கள், ஆடம்பரத் திருமணங்களுக்கும் குறைவில்லை. 

படிப்படியாக நம்மவர்கள் நாடு முழுவதிலும் பரந்து வசித்துவரவும் தொழில்களில் ஈடுபடவும் தொடங்கியுள்ளனர். 

நம்மவர்கள் பிற சமூகங்களின் நிலங்களைக் கொள்வனவுசெய்யும் ஒரு போக்கும் காணப்படுகிறது.

ப்ரேமதாச ஜனாதிபதியாகும்வரை முஸ்லிம்களிடமே ஏற்றுமதி - இறக்குமதி, புடவைக் கைத்தொழில், இரத்தினக்கல் வர்த்தகம், வாகனங்கள் விற்பனை என்பன பெரும்பாலும் இருந்தன. அந்த நிலைமையைப் பாரிய அளவில் ப்ரேமதாசா மாற்றியமைத்து விட்டபோதிலும் இன்றும்கூட முஸ்லிம்கள் இத்துறைகளில் ஓரளவுக்கேனும் ஈடுப்பட்டுள்ளனர். 

கடந்த முப்பதாண்டு யுத்தக்காலப் பகுதிக்குள் நமக்குக் கிடைத்த மோசமான அனுபங்கள் காரணமாகக் கல்வி ஒன்றுதான் நமக்கான பாதுகாப்பு என்பதை உணர்ந்து நமது சமூகம் குறிப்பாகக் கிழக்குச் சமூகம் கல்வியில் விழிப்புணர்வு பெறத் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் நமது பெண்கள் அதிகமாகக் கல்வியில் எழுச்சி பெற்று வருகின்றனர். 

ஜாமிஆ நளீமிய்யாவின் பங்களிப்பினாலும் நமது சமூகம் பல்வேறு துறைகளிலும் உயர்பதவிகளைக் கொண்டுள்ளது. அந்தக் கோபத்தில்தான் பேரினவாதம் அடிக்கடி நளீமிய்யாவின் மீது சீறிப் பாய்கிறது. 

நமது சமூகத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதில் மத்திய கிழக்கின் பாரிய நிதியுதவிகள் கணிசமான பங்களிப்பைச் செய்து வந்துள்ளன. 

மருத்துவம், சட்டம், பொறியியல், நிர்வாகம், வெளியுறவு, நீதித்துறை போன்ற துறைகளில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் நுழைந்து பிரகாசிக்கத் தொடங்கியுள்ளனர். 

அனைத்துக்கும் மேலாக, மற்றெல்லாச் சமூகங்களும் தங்கள் சமய, கலாசாரக் கட்டமைப்புகளிலிருந்து மெல்ல மெல்ல மேற்கத்தியத்தை நோக்கி நகர்ந்துவரும்போது முஸ்லிம்கள் அவ்வாறு தங்களை மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக அவர்கள் தங்களின் அடிப்படைகள் என அவர்கள் கருதும் விடயங்களில் அதிகம் அதிகமாக ஈடுபாடும் பற்றும் கொள்ளத் தொடங்கியுள்ளனர். 

இத்தகைய பல்வேறு காரணங்களாலும் இன்னும் பல காரணங்களாலும் பிற சமூகங்களின் அவதானிப்பில் நாம் நிறையவே உறுத்தலாகத் தென்படுகிறோம்.

இப்போதைய உடனடித் தேவை அவர்களுக்கு உறுத்தலைக் கொடுத்திருக்கும் வெளிப்படையான ஒருசில விடயங்களிலேனும் நாம் சில மாறுதல்களைச் செய்யும் அளவுக்கு நாம் பக்குவப் பட்டேயாக வேண்டும். தவறினால் தாக்குப் பிடிக்க முடியாத அளவிலான அழுத்தங்களுக்கு நாம் உள்ளாக வேண்டிவரும். நமது வீடுகள் கண்ணாடிகளால் ஆனவை ஆதலால் கல்லெறியக் காத்திருப்பவர்களோடு கவனமாகத்தான் நடந்துகொள்ள வேண்டும். 

வரட்டுத் தத்துவங்களும் சமவுரிமை - ஜனநாயகக் கோஷங்களும் நமக்குத் தீர்வையோ அமைதியையோ கொண்டுவரப் போவதில்லை. 

9 பேர் எப்படியும் 91 பேரோடு இணங்கித்தான் போயாக வேண்டும். முரண்டு பிடித்தால் மூக்குடைபடப் போவது நமக்குத்தான் !


9 comments:

  1. A good piece of writing.some realities are exposed. We should know our limit and limitations. It does not mean we are second class people but we should know that we are minority and behave as minorities ..
    Tamil too know that ..yet we should know how to win hearts and minds of people around us ..
    Our disunity is exposed to them so we should know how to live as a community among non Muslim..
    Sorry to say Salafi groups took out problems into court that is the starting point of our problems...
    They came to know our internal problems.
    Beruwala killing is an example ..
    Our politicians too played a negative role in all these issues .
    Look what has Hakeem done for our community ?
    What has Richard done for our community? Compared all day politicians these people are fooling public and milking people for their family but they do not care about people ..
    Religious groups too played a negative role ..
    Why do they fight each other ?we too did many mistakes in our contact with majority community..
    We failed to tell them about Islam .
    We failed to live as Islam tell to live .
    We failed to show Islamic moral in our dealing..
    We failed to tell them about Qur'an and our prophet ..
    Now they got wrong ideas about Islam and Muslims ..
    Where did they get it ?
    From sheikh Google.
    From enemies of Islam and Muslims .
    So who made a mistake..
    We spend a lot of money on weeding while poor go hunger next door ?
    We build big house while next door poor live huts ?
    We do share our food with poor and needy ..
    All this have backfired now .

    ReplyDelete
  2. Very very good article. Thank you very much lawyer.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. இவ்வாறன ஆக்க்கங்கள் மாற்று மொழிக்கு மொழி மாற்றம் செய்யப் படுகின்றது. எனவே பொது தளங்களில் இவ்வாறான சமூக உண்மை தன்மைகளை கூறும் ஆக்கங்களை தவிர்ப்பது நல்லது.

    ReplyDelete
  5. மிக கேவலமான ஒரு ஆக்கம் . வேறு சமூக பெண்கள் முஸ்லிம்களை விரும்புகிறீர்களா ? நீங்கள் பொரறுக்கித் தனம் செய்து சில பேரை அவர்களின் வறுமை மற்றும் குடும்ப நிலையை பயன்படுத்தி ஏமாற்றுகிறீர்கள். எந்த சமூகத்திலும் உள்ள கழிசடைகள் மோசமான நிலையில் உள்ளவர்கள் மாத்திரமே முஸ்லிம்களிடம் செல்வார்கள். உங்கள் பெண்களை சுதந்திரமாக விட்டு பாருங்கள் அப்போது தெரியும் .

    ReplyDelete
  6. மிக கேவலமான ஒரு ஆக்கம் . வேறு சமூக பெண்கள் முஸ்லிம்களை விரும்புகிறீர்களா ? நீங்கள் பொரறுக்கித் தனம் செய்து சில பேரை அவர்களின் வறுமை மற்றும் குடும்ப நிலையை பயன்படுத்தி ஏமாற்றுகிறீர்கள். எந்த சமூகத்திலும் உள்ள கழிசடைகள் மோசமான நிலையில் உள்ளவர்கள் மாத்திரமே முஸ்லிம்களிடம் செல்வார்கள். உங்கள் பெண்களை சுதந்திரமாக விட்டு பாருங்கள் அப்போது தெரியும் .

    ReplyDelete
  7. The fact is that all these problems emerged in our country after So called Wahhabism and Salafism spread their wings to Our beautiful country. if we want to solve all these problems we shod go back to the our real Practice of Islam of Morality and spirituality practiced by Muslims all over the centuries.

    ReplyDelete
  8. The fact is that all these problems emerged in our country after So called Wahhabism and Salafism spread their wings to Our beautiful country. if we want to solve all these problems we shod go back to the our real Practice of Islam of Morality and spirituality practiced by Muslims all over the centuries.

    ReplyDelete
  9. This is not an ugly article but 100% facts.
    how do you diagree..
    it is true that girls of other religions prefer Muslims to marry them. it is not only in sri lanka but in euroep too.

    ReplyDelete

Powered by Blogger.