உயிரிழந்த தேரரின் மரணம் குறித்து தொடர் விசாரணை
சந்தேகத்துக்கிடமாக உ யி ரி ழ ந் த நெதர்லாந்து நாட்டுத் தேரரின் சடலம் ரத்கமவில் மீட்கப்பட்ட நிலையில் தேரரின் உடலிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன என பிரதிப் பொலிஸ் மா அதி பரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொல்கஸ்துவ வனப்பகுதி மடத்தில் தங்கியிருந்த குறித்த தேரர் காணாமல் போனார் என அளிக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய கடந்த செவ்வாய்க்கிழமை ரத்கம பகுதியில் அமைந்துள்ள களப்பொன்றில் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு தேரரின் எச்சங்கள் தொடர்பாகப் பிரேதப் பரிசோதனை நடத்துமாறு நீதிவான் உத்தரவிட்ட நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் ரத்கம பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேரரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
59 வயதான குறித்த துறவி நெதர்லாந்தில் இருந்து 2011 இல் இலங்கைக்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment