இனவாதிகளை மிஞ்சிய, எமது போராளிகள்
கவிப்பிரியன் கந்தளாய் ளரீஃப்
இனவாதிகள் சொன்னால்
ஒரு பொய்யும் உண்மையாகும்.
ஆனால்,
முப்தி ரிஸ்வி சொன்னால்,
பல உண்மைகளும் பொய்யாகும்
இதுவா எம் சமூக தர்மம்?
அவர் தொடவும் இல்லை;
சுடவும் இல்லை
வட்டிலப்பத்தை;
ஆனால், அவரே சுட்டுச் சுமந்து
சென்றதைப் போல் -
பங்கீடு செய்ததைப் போல்
புனைந்து ஒரு பெரியவரைக்
கொன்றொழிப்பது
என்ன மார்க்கம்?
தொட்டதாகவோ அல்லது
சுட்டுச் சுமந்ததாக இருக்கட்டும்
யாருக்காக ?
அவரின் சொந்த
காணிப் பிரச்சினையா?
தோட்டத்து வழக்கா?
அல்லது வீட்டுப் பூதல
வழக்கிற்காகவா?
இல்லை!
நிரபராதியான ஒரு சமூகத்தை
நிரபராதியானது என்பதை
நிரூபிக்க!!!
இங்கோ,
இனவாதிகளை மிஞ்சிய
எமது போராளிகள்
கோமாவில் இருந்து
இன்னும் விழிக்கவில்லை.
அதானாலோ என்னமோ
சமூகத்திற்காய்
சான்றுபகிரப் போனவரை
குற்றவாளிக் கூண்டில் ஏற்றி
கைதட்டிக் குதூகளிப்பில்
பாவம் அந்த
அப்பாவி மனிதர்!!!
ஆறு மணிநேரம்
ஒரு சொட்டுத்
தண்ணீர் இன்றி,
நின்ற நிலையில்
குற்றவாளியைப் போல்
ஆணைக்குழு முன்னால்,
சாட்சியமளித்தாரே
சமூகத்தைப் பாதுகாக்க.
அதே சமூகம் அவர் முகத்தில்
உமிழ்கிறது
நாற்றமெடுத்த
ஈனக்குணத்தை
ஆனால்,
தேனாய் இனிக்கிறது
அதற்கு.
தெளிவுகள் ஏதும் பெறாது,
தொண்டைக்கு வந்தவற்றை
மண்டைக்கு எடுக்காத சமூகம்
அவரை அப்படித்தான் பார்க்கும்.
இராப் பகலாய்
ஓய்வு உறக்கமின்றி,
தனது உம்மத்துக்காய்
அயராதுழைப்பது தெரியும்
எனக்கும்.
அவரது மூச்சும் பேச்சும்
சமூகமே!
மீண்டும் சொல்லுகிறேன்;
ஆணைக்குழுவுக்குப் போனது
எமக்காய்;
அவருக்காக அல்ல.
கொடுத்திருந்தாலும்,
எடுத்திருந்தாலும்
எமக்காகவே அன்றி
அவரது
குடும்பத்திற்காய் அல்ல.
சாட்சியம் வழங்கப் போனாரே
அன்றி,
வழக்காடப் போகவில்லை.
வழக்காடப் போயிருப்பின் கூட
இலஞ்சம் எனலாமோ தெரியாது;
கேட்டிருப்பின் கொடுப்பது
எமது பண்பு!
அது கையூட்டல் அல்லவே,
சமூகத்தை கேவலப்படுத்தவில்லை
அவர்,
சமூகத்தைத் திறந்து
மீட்டெடுக்கப் போனார்.
இது கூடத் தெரியாத
ஊனச் சிந்தனைகளே!
ஏசாதீர்; எழுதாதீர்; விமர்சிக்காதீர்!
திட்டாதீர்கள்
தீர விளங்காமல்!
தீணி போடாதீர்
இனவாத மீடியாக்களுக்கு
அச்சாணியாய் இருங்கள்;
பச்சோந்தியாய் அல்ல!!!
What a joke!!! Funny excuses... Pls don't insult the intelligence of the people
ReplyDelete1.ஜ. உ என்பது யாரினதும் தனிச் சொத்து அல்ல. அதன் பிரதிநிதிகளாகச் செல்வோர் சமூகத்தின்/உலமாக்களின் பிரதிநிதிகளே.
ReplyDelete2.பிரதிநிதிகளாகச் செல்வோர் செல்வதற்கு முன் அவர்களது ex. committee யில் கலந்தாலோசனை செய்துவிட்டு எதை பேசுவது, எப்படி நடந்துகொள்வது என்பதில் ஷூறா முடிவின் அடிப்படையில் செயற்பட வேண்டும்.
3.வட்டிலப்பம் சம்பவம் உண்மையென்றால், அது தனிப்பட்ட முடிவாக இருப்பின் எப்படி முர்ஸித் முளப்பருக்கு ஜ. உ ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததோ அவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அதன் பிரதிநிதிகள் வலுவானவர்களாக இருக்க வேண்டும்.
4.அப்படி வலுவானவர்களாக பிரதிநிதிகளும் இல்லாதபட்சத்தில் வெளியில் நாலு பேர் பச்சையாக விமர்சிப்பதை சகித்துக்கொண்டு சுயநியாயம் கற்பித்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
5. "ஜனாஸா அனுமதி" முந்திக்கொண்டு வொய்ஸ் கட் போடத் தெரிந்தவர்களுக்கு தனக்கு எதிராக பிரதான மீடியாக்களில் பொய்யாக செய்தியொன்று பரப்பப்படுகின்றதெனில் அதற்கு பதில்கொடுக்க முடியாமல் இருப்பதுதான் கேள்விக்குறி.
சரியாக நடந்ததை விளங்கப்படுத்தினால் சிலர் நினைப்பதைப் போல அந்த பேஸ்புக் கார்போர்ட வீரர்களே உண்மையை அடுத்த சமுகத்துக்குக் கொண்டுபோய் சேர்த்து குறித்த மீடியாக்களின் முகத்திரையைக் கிழித்துப்போடுவார்கள்.
சமூகத் தலைமைகள் விடும் தவறுகளுக்கு எவரோ சிலர் நியாயம் கற்பிப்பதாலும் அதற்கு சிலர் 👍 போட்டு Agree ஆவதாலுமே தவறுகள் தொடர்கின்றன
Respected Mufty!
ReplyDeleteTake accountability for your actions & take responsibility for your decisions. Don't play the blame game. Try to learn from your mistakes, which in turn will help you be a better person.
இவர் கொண்டுபோனது வட்டிலப்பம் என்று இவருக்குத் தெரியாதா? இது சமூக வலைத்தளங்களும் இனவாத ஊடகங்களும் சூழ்ந்திருக்கும் இடம் என்று இவருக்குத் தெரியாதா? இப்படி எந்தவித உணர்வும் இன்றி இவரு செய்ததால் இவர் மட்டும் கேவலப்படவில்லை இவர் தலைமை தாங்குவதாக சொல்லப்படுகின்ற ஒட்டுமொத்த சமூகமும் கேவலப் படுகின்றது. இவர் செய்ததை நியாயப்படுத்துவதற்கும் ஒரு கூட்டம் அலைந்து திரிகின்றது #சரியான தலைமைத்துவம் கிடைக்காத வரை இந்த சமூகத்திற்கு கேடு தான். அல்லாஹ் போதுமானவன்
ReplyDeleteCorrect
ReplyDeleteCorrect
ReplyDeleteRespected Mufty!
ReplyDeleteTake accountability for your actions & take responsibility for your decisions. Don't play the blame game. Try to learn from your mistakes, which in turn will help you be a better person.
Respected Mufty!
ReplyDeleteTake accountability for your actions & take responsibility for your decisions. Don't play the blame game. Try to learn from your mistakes, which in turn will help you be a better person.
நன்றிகள் கோடி
ReplyDelete💯💯💯💯
ReplyDeleteMuch needed
ReplyDeleteஎங்க எப்படி போகனும்னு தெரியாதா மாங்கா மண்டையனுக்கு?
ReplyDeleteVery good. This is enough to open eyes. Rizvi mufti went for the community and not for his personal work. May Almighty Allah strengthen him.
ReplyDeleteBetter to update what happen behind the seen
ReplyDeleteMUNAFICK GROUP, ALLAH WILL PUNISHED VERY SOON,
ReplyDelete