Header Ads



மனித உரிமை, மக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும் - பிரதமர் பெருமிதம்


மனித உரிமை, மக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது,

சுபீட்சமான நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து இன மக்களின் மனித உரிமைகளையும் பாதுகாத்து அவர்களின் சுபீட்சமான எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் அரசாங்கம் செயற்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

1950 டிசம்பர் 4 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 317 வது கூட்டத்தொடரில் சர்வதேச மனித உரிமை தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் யோசனை திட்டத்தின் 423(ஏ) பிரிவிற்கு அமைய ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் டிசம்பர் 10 ஆம் திகதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஏற்றுக்கொண்டன.

அனைத்து இனத்தவர்களுக்கும் மனித உரிமைகளை உறுதிசெய்தல், உலகளாவிய ரீதியில் எழும் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணல் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்தல் ஆகியவை சர்வதேச மனித உரிமை தினத்தின் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடான இலங்கை, மனித உரிமை கொள்கைகளை 1955 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. நிலைபேறான அபிவிருத்தி கொள்கையில் மனித உரிமை கொள்கை முன்னுரிமையில் உள்ளது. மனித உரிமை கொள்கையில் ஒற்றுமை, சமத்துவம், கௌரவம், பொறுப்பு மற்றும் சட்டவாட்சி உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்தவாறு அரசாங்கம் செயற்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயமாகும்.

அரசாங்கம் என்ற வகையில் நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியமாகும் . ஆட்சியமைத்த ஒவ்வொரு முறையும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பலப்படுத்தியுள்ளோம்.

சுபீட்சமான எதிர்காலம் என்ற கொள்கையின் கீழ் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 comments:

  1. Or, Who listens to the (soul) distressed when it calls on Him, and Who relieves its suffering, and makes you (mankind) inheritors of the earth? (Can there be another) god besides Allah. Little it is that ye heed!

    ReplyDelete
  2. மனித இனத்தின் மகிமை புரியாத வேட்டையாடக்கூட முறைதலை தெரியாத மானிட ஜென்ம விரோதியே உன்னை யாரடா மனிதனாய்ப் பார்ப்பது நீ ஒரு "மனித ஓநாயடா'

    ReplyDelete
  3. Doing ONE thing Saying the exact opposit of it to the world.

    This is the signs JUSTFUL (?) Rulers of current world.

    Poor People..

    GOD is watching and giving time for them to turn to truth and justice.... If not change... The ONE TRUE GOD who created all Human knows , how to punish them soon in this world adn hearafter.

    Hasbiyallahu Wannihmal Wakeel.

    ReplyDelete
  4. உலகம் அறிந்த பச்சப்பொய்ய எப்படி சிறு கூச்சமுமின்றி கூறுகின்றார்கள் ஆச்சரியமா இல்ல.

    ReplyDelete
  5. கௌரவ பிரதமர் அவர்களே!
    நீங்கள் செயல் வீரர் என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் அடையாளம் கண்டுள்ளோம்.2009ல் பாசிசப் புலிகளை மண்கவ்வச் செய்தமை அதன் உச்சமாகும்.
    இப்போது முஸ்லிம் ஜனாசா எரிப்புக்கு எதிராக செயற்பட்டு மீண்டும் அதனை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்தமையை பயன்படுத்துவீர்கள் என நம்புகின்றோம்.

    ReplyDelete
  6. By talk only its for your regime people???

    ReplyDelete
  7. Rajapaksas are the beast in human form.

    ReplyDelete
  8. மனித இனத்தின் மகிமை புரியாத

    ReplyDelete
  9. மனித
    மகிமை தெரியுமா மிருகதன்மைகூட இல்லாமல் வேட்டையாடி வெறிபிடித்து நெறிதவறி நாட்டை நெருப்பில் நாசம் செய்யும் கோரக்கொலைகாரக்கும்பல்களுக்கு

    ReplyDelete
  10. ONE Day... alomost when corona comes to the end... they will say we grant permission for Muslims to burry their dead bodies and we respect their rights. It is not us... but the health authority was blocking the burrial.... Then you know what will happend.... There are likers of boots from our muslim communtiy will praise these leaders saying they love muslims.

    When they need next votes from muslims.... They will play dramaaa of corocodile tears..

    BUT True muslim will keep truls only on and will keep rasing his hand toward Allah and asking to destroy and errase these racists from these sweet land that bleongs to Good citizens.

    ReplyDelete

Powered by Blogger.