தற்காலிகமாக மூடப்பட்ட, இலங்கை துணைத் தூதரகம்
இத்தாலியின் மிலனில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம் டிசம்பர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளர் ஒருவர் அண்மையில் துணைத் தூதரகத்தின் அலுவலகத்திற்கு வந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
அலுவலகத்தை கிருமி நீக்கம் செய்யவும், அனைத்து ஊழியர்களையும் பி.சி.ஆர். சோதனைக்குட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூதரகத்தின் பொது அலுவலகத்தை எப்போது திறப்பது என்பது குறித்த முடிவு செவ்வாய்க்கிழமை எட்டப்படும்.
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் அவசர தேவைகள் ஏற்பட்டால் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 388 724 9016 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment