வேறுபாடுகளைக் களைந்து மனித உரிமைகளுக்காக, கைகோர்க்குமாறு இலங்கை திருச்சபை கோரிக்கை
நாட்டில் பாரதூரமான மனித உரிமை பிரச்சினைகள் காணப்படுவதாக இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவலை தெரிவிப்பதாக உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் உடல் நலம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேறுபாடுகளைக் களைந்து மனித உரிமைகளுக்காக கைகோர்க்குமாறு இலங்கையர்கள் அனைவரிடமும் இலங்கை திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
Post a Comment