மாதம்பிட்டி ஜம்ஆப் பள்ளிவாசலின் முன்மாதிரி நடவடிக்கை
(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பு 14 மாதம்பிட்டி ஜம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை மாதம்பிட்டி பகுதியில் வாழும் மூவினங்களை சாா்ந்த 1000 குடும்பங்களுக்கு உலா் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனா். இந் நிகழ்வு இன்று 14.12.2020 பள்ளிவாசலில் முன்றலில் நடைபெற்றது. கடந்த 4 வாரங்களாக கொவிட் 19 காரமாக லொக்டவுன் பிரதேசமாக இருந்த மக்கள் நாளாந்த உணவுக்காக பெரிதும் கஸ்டங்களை எதிா்நோக்கியினாா்கள். இதற்காக பள்ளிவாசல் 20 இலட்சம் பெறுமதியான பொதிகள் ஒவ்வொன்றும் 2ஆயிரம் ருபா பெருமதியானது. இதனை பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளா் பைருஸ் சம்சுதீன், பௌத்த ஹிந்து மதத் தலைவா்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பிணா் மொகமட் பாயிஸ், மாநகர சபை உறுப்பிணா் ஸமந்த குலரத்ன, கிராம சேவகா் உத்தியோகத்தா் நித்தியாணந்தன், அஸ்சேக் பருத் (இஸ்கானியா) சிரேஸ்ட ஊடகவியாளா் அகமத் முனவா் மற்றும் பள்ளிவாசல் நிர்வாக உத்தியோகத்தா்களும் கலந்து சிறப்பித்தனா்.
இப் பிரதேசத்தில் வாழும் சந்திமா பெரேரா தகவல் தருகையில் கடந்த 4 வாரகாலமாக வீடுகளில் முடங்கிக் கிடந்தோம். இந்தப் பள்ளிவாசல் உறுப்பிணா்களாவது எங்களுக்கு முன்வந்து இந்த உலா்உணவுப் பாா்சலை தந்துள்ளாா்கள். இதனால் இப்பிரதேச வாழ் 1000 குடும்பங்களது ஒரு வாரகால வயிற்றுப் பசிக்கு உணவளித்தமைக்காக தெய்வம் மேலும் மேலும் அவா்களுக்கு நல்ல பாக்கியத்தை கொடுக்க வேண்டும்்
Post a Comment