சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழுவுக்கு, ஒரு உலமாவின் பகிரங்க சவால்
- அஷ்ஷைக் நாகூர் ளரீஃப் -
உலக நாடுகளில் கொரோனாவினால் மரணிக்கும் சடலங்களை தகனம் செய்தல் அல்லது நல்லடக்கம் செய்தல் என்ற நடைமுறை பின்பற்றிப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள்.
இவ்வாறிருக்க இலங்கையில் மாத்திரம் தகனம் செய்தல் மாத்திரம் என்ற நடைமுறையைப் பின்பற்றி வருகின்றீர்கள்.
இதனைப் பல நாடுகளும் அமைப்புக்களும் கடுமையாக விமர்சித்து வருவதையும், இலங்கையில் பல்லின மக்களும் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் இதனை எதிர்த்து வருவதையும் தாங்கள் அறிவீர்கள். எமது அமைச்சரவை, பாராளுமன்றம், புத்திஜீவிகள் என அனைவரையும் விட தாங்களிடம் மாத்திரமே இதன் தனி அதிகாரம் தங்கியிருப்பதை நீங்களும் மறுக்கமாட்டீர்கள்.
இவ்வாறிருக்க, பூமியில் நல்லடக்கம் செய்யப்படும் சடலங்கங்களில் இருந்து 23 தினங்கள் கிருமி தொற்றுவதாக நீங்கள் அறிவித்துள்ளீர்கள்.
உண்மையில் உலக சுகாதார மேதாவிகளை எல்லாம் மிஞ்சிய தாங்கள், கொரோனா தொற்றினால் மரணித்த ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை எனது பிரதேசமான மாத்தளையில் நல்லடக்கம் செய்யுங்கள்; 23 தினங்களாக அடக்கம் செய்யப்படும் அந்த மண்ணறையின் அருகாமையில் இரவு பகலாக நான் தங்கியிருக்கத் தயாராக இருக்கிறேன்.
எனக்கு அதன் காரணமாக தொற்று ஏற்பட்டால், நீங்கள் உலகை மிஞ்சிய சுகாதார வித்துவான்கள் என்பதை உலகிற்கும் தெரியப்படுத்தாலாம்.
அத்துடன், அதற்கு ஈடாக நீங்கள் என்ன விலை கோரினாலும், எமது சமூகம் தருவதற்கு ஆயத்தமாக இருக்கிறது என்பதையம் இத்தால் அறியத்தருகிறேன்.
Masha Allah
ReplyDeleteShe may be satisfied very soon when she reaches centuary by cremating 100 janaza. They are waiting to reach the target of 100.
ReplyDeleteமுடியுமானவர்கள் இதனை சிங்களத்தில் மொழியாக்கம் செய்து தாருங்கள்.
ReplyDeleteமுடியுமானவர்கள் இதனை சிங்களத்தில் மொழியாக்கம் செய்து தாருங்கள்.
ReplyDeleteGreat
ReplyDelete😆😆😆😆😆😆😆
ReplyDeletedon't use her bloody pig face here,
ReplyDeleteசவால் விட்ட ஆலிம் அவர்களின் மனக்குமுறலையும் மனத்துணிவையும் விளங்கிக் கொள்கிறோம் பாராட்டுகிறோம். ஆயினும் எதிர்த் தரப்பினர் இதனை எள்ளி நகையாட இடம் உள்ளது.அவர்கள் கூறுவது நிலக்கீழ் நீரின்மூலம் வைரஸ் பரவும் என்பதாகும். அதற்குரிய பதில் இதுவல்ல.வைரஸ் இயல் அடிப்படையில் இதற்குபரிய பதிலை உலகப் புகழ்பெற்ற நுண்ணுயிரியல் பேராசிரியர் மலிக் பீரிஸ் இறந்த உடலில் இருந்து COVID-19 வைரஸ் பரவாது என்று அறிவியலின் அடிப்படையில் தெளிவாக விளக்கியுள்ளார்.எனவே வெறுமனே ஒருவர் அடக்கத்தலத்தின் அருகாமையில் நீண்ட காலம் நிலத்தின்மேல் அமர்ந்திருந்து அவர்கள் கூறுவதை முறியடிக்க முடியாது. அவ்வாறு கூறி நம்மை நாமே முட்டாள்களாக்கிக் கொள்ள வேண்டாம்.அறிவியல் விளக்கத்தை இங்கே தர அதிகம் எழுத வேண்டும்.பலருக்கு அது சிதம்பர சக்கரமாகத்தான் இருக்கும்.
ReplyDelete