மற்றொரு அலையைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்: கொழும்பு மேயர்
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இராணுவ, பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் கொவிட்-19 நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் மூன்றாவது அலையைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்தார்.
சியோல் பெருநகர கொரிய அரசு கொழும்பு மாநகர சபை மேயரின் கோரிக்கைக்கிணங்க 18ஆயிரம் முகக்கவசங்களை இன்று நன்கொடையாக வழங்கிய நிகழ்விலேயே மேயர் மேற்கண்ட கருத்தை வெளிப்படுத்தினார்.
கொரிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கான கொரியத்தூதுவர் வூன்ஜின் ஜீன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
Post a Comment