மௌனம் ஆகியதன், மர்மத்தை யாரறிவார்....??
- தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா -
சமுதாயக் கடமையினை மறந்து உலக ஆசையில் மூழ்கும் சில அரசியல்hதிகளும்,அவர்கள் செய்வது சரியென்றும்,பிழையென்றும் விமர்சிக்கும் வெற்றுச் சமூகத்தின் ஒவ்வொரு பிரதி நிதியும் தம்மை மீள் சீர்ப்படுத்த வேண்டிய நிலைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.
மனிதனின் வாழ்வு என்பது எத்தனை வருடங்கள் என்பதை எவராலும் உறுதிப்பட கூற முடியாது.இந்த விடயம் தொடர்பில் ஆழமாக இருக்கும் இறை விசுவாசியொருவருக்கு அடிப்படையின் வெளிப்பாடாகும்.தான் தடுக்கி தறையில் விழக் கிடைத்தாலும்,ஏன் அவன் எதிர் கொள்ளும் வாழ்வின் ஒவ்வொரு கால் பதிப்பிலும் இதனை அவன் மறந்து செயற்பட முடியாது.
இவ்வளவு தாற்பரியங்களும்,சத்தியமும் நிறைந்த மார்க்கத்தின் நிழலில் வாழும் மனிதன் எல்லா சந்தர்ப்பங்களிலும்,அவன் மிகவும் நேர்த்தியாகவும்,நிதானமாகவும் தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளவதுடன்,தன்னை விட உயிரிலும் மேலாக அவனது மதம் சார்ந்த நம்பிக்கை அமையும் போது தான் எதிர்பார்த்த மறுமைக்கான அடித்தளத்தினை அவனால் அடைய முடியும் என்பதை மனிதர்கள் அறிந்து கொள்வார்கள்.
அதே போன்று தான் தiலைமைத்துவக்கட்டுப்பாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்டதாக இருக்கும் வரை இதனை ஊடறுத்து எந்த சக்தியும் செல்லாது என்பதற்கு இஸ்லாமிய வரலாற்று சான்றுகள்; ஏராளம் உள்ளது.ஒரு ஆடானாது தனது மந்தையினை விட்டு தனித்து செல்லும் எனில் அதனை ஓநாய் இலகுவாக கவ்விக்கொள்ளும் என்பதற்கு போதுமான உதாரணங்களை இன்றைய அரசியல் சூழலில் நாம் நிதர்ஷனமாக கண்டுகொண்ட உண்மையாகும்.இதனை தவிர்ப்பதற்கு முற்பட்டாலும் பக்குவப்படாதவர்கள் மக்களை வழி நடத்த வருகின்ற போது எதிர்ப்பார்ப்புக்களுக்கே முன்னுரிமையளிப்பது இவர்களின் வெற்றியாக மாறிவிடுகின்றது.
இலங்கை அரசியல் வரலாற்றில் நாம் கற்ற பாடங்கள் நிறைய இருந்த போதும்,அதனை முன்னுதாரணமாக கொண்டு செயற்படும் உணர்வுகளும்,போதுமான முதிர்ச்சிகளும் இன்றைய இந்த அரசியல் கலாசாரத்தில் காணமுடியாது போயுள்ளது.
தாம் பின்பற்றும் மதத்தை இழிவாக பேசும் நபர்கள்; இருக்கும் சபையில் அதனை எதிர்த்து தனது சத்தியக் கருத்தினை கூட சொல்ல முடியாத அளவுக்கு அதிகாரத்தை கொடுப்பவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறி தனது சொந்த தேவைகளை மட்டும் நிரலாக கொண்டு இயங்கும் மக்கள் சபையின் பிரதி நிதிகளை கண்டு கவலைப்பட்டும் பிரயோசனமில்லை,கண்டனங்களை தெரிவித்தும் பலனுமில்லை என்பதை நாம் புரிந்தாக வேண்டும்.
தற்போதைய இலங்கை தேசத்தின் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் பற்றி கவனம் செலுத்தப்பட்டுவருகின்ற நிலையில் பாடப் புத்தகங்களில் முஸ்லிம் சார்ந்த விடயங்களைக் கூட வலிந்து இழுத்து அவமானப்படுத்தும் உலவியல் ரீதீயான யுத்தமொன்றின் வெளிப்பாடு என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றோமே என்பதை புரிதலுக்கு சொன்னாலும் அதனை புரிந்து கொள்ளமுடியாத சமூகத்திள் தலைமைகளாக சில அரசியல்வாதிகள் மாறியிருப்பது நாம் பிரதி நிதித்துவப்படுத்தும் சமூகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்காது என்பதை சொல்லியாக வேண்டும்.
இன்றைய பாராளுமன்றத்தில் பேசப்படும் முஸ்லிம் எதிர் பேச்சுக்கள் ஹன்ஸாட்டிலும்,சமூக ஊடகங்களிலும்,ஏன் பெரும்பான்மை ஊடகங்களிலும் வெளியிடுவதை அவதானிக்கின்ற போது பெரும் கவலையளிக்கின்றது.இதற்கு எதிராக வரிந்து கொண்டு பேச வேண்டியவர்கள் சிலர் எதிர்ப்பார்ப்புகளுக்காக மௌனித்து இருப்பதானாது,மக்கள் அவர்களுக்கு கொடுத்த ஆணைக்கு மாறானாதாகும்.
வாய்க்கு வாய் சுபஹானல்லாஹ்,அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லிக்கொண்டு இஸ்லாம் கொலை செய்யப்படுகின்ற போது கூட இதற்கெதிரான கருத்துக்களை தெரிpவிக்க முடியாத நிலையில் கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்த போடும் தலைமைகள் பற்றி மக்கள் தீர்மானிப்பார்கள்.எம்மை பொறுத்த வரையில் சமூகத்தின் அங்கத்தவர்கள் என்ற வகையில் வாழும் உரிமையினை உறுதிப்படுத்தும் தலைமைகளின் அவசியமே இன்று தேவைப்படுகின்றது.அபிவிருத்திகளை மட்டும் கொண்டு வந்து கொடுத்துவிட்டால் மக்கள்; வாழ்ந்து விடுவார்கள் இது மட்டும் தான் மக்களின் தேவையென நினைத்து பட்டியலைக்கு கொடுக்கும் நிலையில் இருந்து விடுபட்டு மதக் கடமைகள் முடக்ப்பட்டும்,உணர்வுகள் புதைக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில் வெறும் பெயர் தாங்;கிகளாக மட்டும் இருந்துவிட்டு போவார்கள் எனில் இது அவர்களுக்கு மட்டும் நன்மையாக அமையட்டும் என்ற சமூகத்தின் ஆசிர்வாதம் இருக்கட்டும்.
தான் சார்ந்த சமூகத்தின் வாக்கினால் மக்கள் பிரதி நிதிகளாக மாறிய ஒட்டு மொத்த அரசியல்வாதிகளும் சமூகம் காயப்படுத்தப்படுகின்ற போது குறைந்தது காயப்படுத்தியவர்களை கண்டிக்காது அவர்களுடன் குளிர்கால அரசியல் நடத்தும் துர்ப்பாக்கிய நிலையினை நாம் கானுகின்றோம்.வளர்த்த கடா மார்பில் பாயும் என்பார்கள் இன்று இந்த நிலையில் தான் எமது சமூகத்தின் அரசியல் பயணம் அமைந்துள்ளது.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிற்பாடு எமது சமூகத்தின் மீது வீசப்பட்ட அபாண்டங்கள் ஏராளம்,இதனையொட்டி முஸ்லிம் பெயர் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளின் நாமங்களை கூறும் போது இதற்கெதிரான விசமத்தனமான பிரசாரங்களை அல்லி வீசும் அவலமான அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடு மறுபுரம்,இதற்கு மத்தியில் நடை பிணமாக பயணிக்கும் வலுவிழந்து கொண்டு போகும் எமது சமூகம்.
இவற்றை தராசில் வைத்து நெறுத்து பார்த்தால் கணக்கப் போவது தனது அரசியல் வாழ்வு மட்டுமே என்பது உண்மையும்,யதார்த்தமுமாகும்.ஒன்றை இழந்தால் தான் அதனது அருமை தெரியும் என்பார்கள்,அதற்கமைவாக இலங்கை முஸ்லிம் சமூகம் இழந்து தவிப்பது தமது மதக் கடமையினை கூட நிறைவேற்ற முடியாத நிலையினை என்பதை புரிந்துகொள்வோம்.கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு இந்த கட்டுரை எவரையும் தனிப்பட்ட காயத்தை ஏற்படுத்த பதிவிடும் ஒன்றல்ல.தேவையானதை தேவையானவர்கள் அணிந்து கொள்ள முடியும்.
Do not blame alone but blame stupid public who voted for them ..People in Bativaloa should vote Tamil MP Sanakkiayn that these traitors .
ReplyDeletePeople will teach them a lesson next time .
Do not forget this ..
Wait and see
தேச துரோகத்துக்கு உச்ச கட்ட தண்டனை இஸ்லாத்தில் எது இருக்கோ அதை 20 க்கு வாக்களித்த அந்த 7 முனாபிக்கும் நிறைவேற்றணும்.
ReplyDeletePeople must through away these all idiots. First they must know how to speech fluently at least in their language.... looosuppayalgal
ReplyDeleteஅரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.ஏமாற்றும், பொய் வாக்குறதியும் கூறி பாமர மக்களை ஏமாற்றியே ஆட்சிக்கு வருகிறார்கள் இதை படித்தவர்கள் முன் நின்று தடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் இன்நிலை தொடரும்.நியாஸ் இப்றாகிம்
ReplyDeleteYES SANAKKIYAN BETTER THAN THIS FOXES, MUSLIM NEED TO WAKE UP ABOUT, SUPPORT WHO ARE TALKING TO YOU AND HELP TO YOU
ReplyDeleteSANAKIYAN BETTER THAN THESE DOGS
ReplyDelete