Header Ads



மூத்த பேராசிரியர் கென்னடி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு


ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் கென்னடி டி.குணவர்தன எதிர்க்கட்சித் தலைவரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவைச் சந்தித்து தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இனைந்து  முன்னெடுக்க முடிவு செய்துள்ளார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறையில் கணக்கியல் தகவல் துறை விஷேட நிபுணராவார்.அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரும் துறை சார் விரிவுரையாளருமாவார்.ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகவும் பெயர் குறிப்பிடப்பட்டவராகவும் இருந்தார்.

கணக்கியல் துறை பிரபலமான இவர் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை முகாமைத்துவ கற்கைகள் குழுமத்தின் தவிசாளராக கடமையாற்றியுள்ள இவர்,2012 ஆம் ஆண்டிலிருந்து முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீட முகாமைத்துவ கற்கைகள் பிரிவின் கலாநிதி கற்கைகளுக்கான முதலாவது ஒருங்கிணைப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.கணக்கியல் துறை சார்ந்த தரமான பல ஆய்வுகளை எழுதியுள்ள அவர் அத்துறை சார்ந்த பிரசித்தி பெற்ற எழுதாளரும் கூட.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்த்திட்ட மற்றும் ஆராய்ச்சி பிரிவில் விஷேட பெறுப்பொன்று அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.