கொழும்பின் சில அடுக்குமாடி குடியிருப்புக்கள் விடுவிப்பு
கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 அடுக்குமாடி குடியிருப்புக்கள் இன்று (12) காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, முகத்துவாரம் மெத்சந்த செவன, மட்டக்குளி ரன்திய உயன, முகத்துவாரம் மிஹிஜய செவன, கிரேன்பாஸ் மோதர உயன, கிரேன்பாஸ் சமகிபுர, தெமடகொட மிஹிந்துசெத்புர ஆகிய தொடர் மாடிக் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் பின்னர் அதன் முடிவுகளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணவத்தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment