ஓராண்டு ஷரீஆவில் ஆண்டு பாருங்கள்....
- Dr அப்துல் ரஷாக் -
முஸ்லிம் என்ற பதம் மனிதர்கள் நினைத்துக்கொண்டிருப்பது போல் 1400 ஆண்டுகளுக்குமுன்பிருந்துதான் உலகில் தோன்றி பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றில்லை. முதல் மனிதபடைப்போடு முஸ்லிம் என்ற பதம் உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
முதல் மனிதன் தான் படைக்கப்பட்டது முதல் தன்னைப்படைத்த இறைவனையே வணங்கினார். அந்த முதல் மனிதனை இப்போது வாழும் சிலர் தங்கள் கடவுகளாக வழிபடுகின்றனர். ஆனால்இஸ்லாம் அந்த முதல் மனிதனைப் படைத்த இறைவன் எவனோ அவனே தங்களையும் படைத்தான், பரிபாலிக்கின்றான் என்று சொல்லி அந்த ஏக இறைவனையே வணங்கவும் சொல்கிறது; அதையேமுஸ்லிங்கள் செய்தும் வருகின்றனர்.
பொது எதிரியாக இஸ்லாமும் முஸ்லிங்களும் பார்க்கப்படும் இக்கால கட்டத்தில் மனிதன் தனதுவாசிக்கேற்றாற்போல் இஸ்லாத்தையும் முஸ்லிங்களையும் தூற்றுகிறான். மனிதர்களின் நடத்தைஅவன் பின்பற்றும் மார்க்கத்தை தூற்ற வைக்கிறது என்பதே இங்கு யதார்த்தம். மாறாக மனிதனதுநடத்தைக்கும் அவன் பின்பற்றுவதாக அல்லது அவன் இருப்பதாக சொல்லப்படும் மார்க்கத்திற்கும்ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று ஆராயாமல் கருத்துக்களை விதைத்து பரப்புகின்றமையே இந்தபொது எதிர்ப்புக்கு காரணாமாக அமைகிறது.
இஸ்லாத்தில் சொல்லப்படும் ஆட்சிமுறைமையை இப்போது ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள்எவராயினும் படித்துவிட்டா அதன் மீது குற்றம் சொல்கிறீர்கள்? நாங்கள் இஸ்லாமியஆட்சிமுறையை படிக்கவில்லை யாரோ சொல்வதைத்தான் கேட்டும் நம்பியும் இவ்வாறுசொல்கிறோம் என்றால் அத்தகைய ஆட்சியாளர்கள் இஸ்லாத்தை விமர்சிப்பதற்காகவேண்டியேனும்அதனை ஆராய வேண்டுமல்லவா?
இஸ்லாத்தில் கூறப்பட்ட குற்றங்களும் தண்டனைகளும் என சில விடயங்களைதொட்டுச்செல்லலாம் என நினைக்கின்றேன்.
மது மனிதர்களுப்பிரச்சினை என்று ஒத்துக்கொள்ளாத யாருமில்லை. அத்தகைய மது ஏற்படுத்தும்விளைவுகளை நான் கூறி நீங்கள் அறியவேண்டியதில்லை. மது அருந்தினால் இஸ்லாத்தில்சொல்லப்பட்ட தண்டனையை பொதுவிடத்தில் மக்கள் முன்னிலையில் நிறைவேற்றிப்பாருங்கள்.
களவெடுத்தால் பாரபட்சமின்றி பொதுவிடத்தில் கையை வெட்டிப்பாருங்கள்.
கொலை செய்தால் கொலைக்குப்பகரமான நட்டீட்டையோ அல்லது கொலையோ எனபொதுவெளியில் நிறைவேற்றிப்பாருங்கள். திரைசேரியை நிரப்புதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரிஅறவீட்டை மேற்கொண்டு நாட்டையும் ஏழைகளையும் வளப்படுத்தப்பாருங்கள். நீங்கள்ஜனாதிபதியோ அமைச்சரோ மந்திரியோ என்பதற்காக ஒரு சாதாரண மனிதனுக்கு கிடைக்கும்சலுகையை விட அனுமதிக்கபட்டவற்றை தவிர்த்து பெறாது இருந்து பாருங்கள்.
இப்படி நீங்கள் தேடும் தீர்வுகளுக்கான சட்டங்கள் எதுவும் இஸ்லாத்தில் இல்லாமலில்லைஏனெனில் அது பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம்.
நீங்கள் இயற்றிய சட்டத்தில் ஆயிரமாயிரம் ஓட்டைகள். அவற்றில் தங்கள் குற்றஅளவுக்கேற்றாற்போல் அரசன் முதல் ஆண்டி வரை நுழைந்து விளையாடிக்கொடிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட நீங்கள்தான் இஸ்லாமிய சட்டத்தை குறைகூடிக்கொண்டும் வாழ்ந்தும் வருகிறீர்கள்.
குற்றங்களைத்தடுக்கவும் தண்டிக்கவும் வழிகளை சொல்லித்தந்த மார்க்கம் மக்கள் வாழவும்வழிசொல்லித்தந்திருக்கிறது.
நீங்கள் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட ஆட்சியைப்புரிவதற்கு யாரும் இஸ்லாத்திற்கு மாறவேண்டும்என்றில்லை. அதில் சொல்லப்பட்ட விதத்தில் ஓராட்சியை ஓராண்டுக்கு ஆண்டு பாருங்கள். இந்தநாட்டை அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்ல எங்கள் அத்தியாவசிய தேவைக்கு செல்லும்செலவு தவிர்ந்த அனைத்து ஊதியத்தையும் அந்த ஓராண்டுக்கு அர்ப்பணிக்கிறோம்.
திரு கார்டினல் அவர்கள் ஷரியா சட்டத்தை விமர்சித்தார் ஆனால் ஜம்மியத்துல் உலமா இதுவரை ஒரு கண்டன அறிக்கை வெளியிடவில்லை.தலைவர் ரிஸ்வி முப்தி சொன்னார் முன் பொருமுறை இந்த கார்டினல் நெற்றியை முத்தமிட வேண்டும் என்று! இப்போ இவரு ஷரியா சட்டத்தை விமர்சித்து இருக்கார் இப்போ என்ன பதில் சொல்லுவார்?நோன்பு பிடித்து குனுத் ஓதுவோம் என்றா?
ReplyDeletetruth will prevail
ReplyDeleteIvare oru inavaathi ivaritta poi etha solla????
ReplyDeleteகுர்-ஆனை பொறுத்தமட்டில் "சகோதரத்துவம்" என்பது இதர முஸ்லிம்களுக்கு மட்டுமே காட்டப்படும் சகோதர அன்பாகும். குர்-ஆன் முஸ்லிமல்லாதவர்களிடம் சகோதர அன்பை காட்டும்படி சொல்வதில்லை. அவர்களிடம் வெறுப்புணர்வைக் காட்டுகிறது. முஸ்லிம்கள் இஸ்லாமினால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எண்ணக்கள், படிப்பு மற்றும் உள்ளத்தின் ஆசை ஆகியவைகள் நவீன உலகைப் பற்றிப் பிடித்துள்ளது. நவீன உலகின் தற்கால வெளிச்சத்திற்குள்ளே எப்படி ஒரு முஸ்லிம் ஏழாம் நூற்றாண்டின் கோட்பாடுகளை புகுத்தமுடியும்?
ReplyDeleteMr. Unknown, your comments all unknown.... revise your knowledge in good manner with true !!!!
ReplyDeleteஇப்படியான தலைப்புகளே மிகவும் சிக்கல் மிகுந்தவை. குறிப்பிடப்பட்ட விடயங்களுடன் தொடர்புடையதாக எங்களது கருத்துக்கள் மிகவும் ஒத்துவரக்கூடியதாக இருக்க வேண்டும். எங்களிடம் எழுதுவதற்குப் பேனாவும் அதனைத் தாங்குவதற்கு வெள்ளைக்கடதாசியும் அதனை அனுப்புவதற்கு LapTop பும் அதனைப் பிரசுரிக்க Jaffna Muslim மும் இருக்கினறது என்று நினைத்தால் அது ஒழுங்கு அல்ல. விடயத்தை விளங்கி உங்களுடைய பதிவினை சரியாக எழுதுங்கள்.
ReplyDelete