Header Ads



ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி என்ன, உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும் - வாசுதேவ


- ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் -

எம்.சி.சி உடன்படிக்கையும், அதனை விரைவாக கைச்சாத்திட வேண்டும் என்ற அவசரமும், அதற்கான தேவையின் பின்னணியின் காரணி எதுவாக இருக்க முடியும் என ஆராய்ந்தால் ஈஸ்டர் தாக்குதல் ஏன் இடம்பெற்றது எனவும், சூத்திரதாரி யார் எனவும் கண்டறிய முடியும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சபையில் தெரிவித்தார். இதனுடன் தொடர்புபட்ட நபர்கள் இன்று பாராளுமன்றத்தில் இல்லை எனவும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி என்னவென எதிர்க்கட்சியினர் சபையில் கேள்வி எழுப்புகின்றனர். இதன் பின்னணி தெரிந்துகொள்ளப்பட வேண்டும் என்றால், என்ன சூழ்ச்சி என அறிந்துகொள்ள வேண்டும் என்றால் எம்.சி.சி உடன்படிக்கையும், அதனை விரைவாக கைச்சாத்திட வேண்டும் என்ற அவசரமும், அதற்கான தேவையின் பின்னணியும் எதுவாக இருக்க முடியும் என சிந்தித்துப் பார்த்தல் இந்த தாக்குதலின் பின்னணி என்னவென கண்டறிய முடியும். இதன் பிரதான சூத்திரதாரி யார் என்பதை கண்டறிய முடியும், நான் கூறுவது மறைமுகமான கருத்தாக இருக்கலாம் ஆனால் நான் இவற்றை கூற வரும் நபர் இந்த சபையில் இல்லை, ஆனால் நீதிமன்றத்தில் சந்திக்க முடியும்.

இந்த தாக்குதலின் பின்னர் நாட்டில் நடக்கவிருந்த  கலவரத்தை கருதினால் அவர்கள் நிறுத்தினார். அதற்காக நாம் கருதினாளுக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும்.

ஆனால் அந்த வேளையிலும் ஹரின் போன்றவர்கள் அவதூறுக் கருத்துக்களை முன்வைத்தனர். குளியாப்பிட்டிய, மினுவாங்கொடையில் ஒரு கலவரம் இடம்பெற்றது.

குற்றவாளிகளை பொலிசார் கைதுசெய்தனர். உடனடியாக அந்த இடத்திற்கு சென்ற அப்போதைய ஆளும் கட்சியின் நபர்கள் குற்றவாளிகளை விடுவித்தனர். இதுவும் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற என்ன காரணம், யார் காரணம் என்பதற்கு நல்லதொரு சாட்சியாகும். எனவே இவற்றை கண்டறிந்தால் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை கண்டறிய முடியும். 

2 comments:

  1. start from rajapaksa regirmnt thugs maipya ,then donkey mithree, fox ranil , , now going inquary is eye wash
    these thugs fakely blmae muslim community , minoroity people ,recently

    ReplyDelete
  2. குண்டு வைத்தவர்கள் இயக்கப்பட்டவர்கள் எல்லாம் மரணம் ஆகிவிட்டார்கள்.முஸ்லிம்களின் சொத்துக்களை சேதம் செய்தவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் அவர்களை சரியா விசாரனை செய்து தண்டனை கொடுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.