ஏப்ரல் மாத்திற்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல்
பழைய முறையிலோ, புதிய முறையிலோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமருக்கும், ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய விபரங்கள் ஆராயப்பட்டன.
இந்தச் சந்திப்பு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
அடுத்தாண்டு ஏப்ரல் மாத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம் என மாகாண சபை அங்கத்தவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
many people will have to go home
ReplyDelete