அனைத்தையும் தேடித்தேடி எரிக்க வேண்டுமல்லவா..?
இஸ்லாமிய வழிகாட்டலின் பிரகாரம் மரணித்த ஒருவரின் ஜனாஸாவானது எந்த ஒரு வேதனையும் செய்யப் படாது நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் .
அதேநேரம் 182 இற்கு மேற்பட்ட நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை , உலக சுகாதார ஸ்தாபனம் போன்றவை எரிப்பதற்கும் அடக்கம் செய்வதற்கும் முன்மொழிந்து சிபாரிசு செய்திருக்கின்ற போது அதற்கு மாற்றமாக இலங்கைத் திருநாட்டில் மாத்திரம் எரித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பிரயோகிக்கப் படுவது வேண்டும் என்றே ஒரு சமூகத்துக்கு எதிராக அரங்கேற்றப்படுகின்ற சூழ்ச்சியே தவிர வேறு நியாயங்களை காணமுடியாது என கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் எம்.எம்.மஹ்தி இன்று (06) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
தங்களுடைய அடிப்படை உரிமை மீறப்படக் கூடாது என்று கருதிய இந்நாட்டு முஸ்லிம்கள் அதனை தடுப்பதற்காக முதலில் அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து நீதிமன்றங்கள் ஊடாகவும் போராடடத்தை தொடர்ந்தார்கள்.
நீதிமன்றில் முடியுமானவரை தங்கள் பக்க நியாயங்களை முன்வைத்த போதும் மரணித்த உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டன மிகவும் வேதனை அளிக்கின்றது.
covid-19 வைரஸ் நிலத்தின் ஊடாக பரவும் என்பதற்கு போதுமான சான்றுகள் இல்லாமல் இருந்தும் இந்நாட்டின் நுண்ணுயிர் சார் நிபுணர் குழ எரிக்கத்தான் வேண்டும் என்ற பரிந்துரையை செய்திருப்பது ஏனைய நாடுகள், உலக சுகாதார நிறுவனங்களை விடவும் கோவிட் 19 வைரஸ் சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இந்நாட்டில் இருக்கின்றார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது
covid-19 வைரஸ் ஆனது தொடுகை மூலமும் காற்றின் மூலமும் பரவலாம் என்பதற்காக சமூக இடைவெளியையும், கை கழுவுகின்ற, மாஸ்க் அணிகின்ற முறைமைகளையும் முன்மொழிந்த இக்குழுவின் பரிந்துரை சரியானது நியாயமானது என்று எடுத்துக்கொண்டாலும் கூட கோவிட் 19 வைரசினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த ஒரு நோயாளி ஒருவரால் உபயோகப்படுத்தப்பட்ட ஆடைகள், கட்டில்கள், அவர் பரிமாறிய பண நோட்டுகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள் வைத்தியசாலை மலசலகூட உபகரணங்கள், அவர் இருந்த கட்டிடம், அவர் பாவித்த வாகனம், அவர் உமிழ்ந்த இடங்கள், அவரின் மூக்கிலிருந்து வெளியேறிய சளியம் வீசப்பட்ட இடங்கள் போன்ற அனைத்தையும் தேடித்தேடி எரிக்கவும் வேண்டுமல்லவா?
கோவிட் 19 வைரஸை , அடையாளம் கண்டு ஆய்வுகள் செய்து அதற்கான மருந்துகளையும் கண்டுபிடித்து சிபாரிசு செய்கின்ற வல்லரசுகளும், மருத்துவத்தில் முன்னணி வகிக்கும் நாடுகளும் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கின்ற போது இலங்கை என்ற நம் நாட்டில் மாத்திரம் அனுமதி மறுக்கப்படுகின்றது என்றால் இது வேண்டுமென்று ஒரு சமூகத்தின் மீது திட்டமிட்டு செயற் படுத்தப்படுகின்ற ஒரு செயலே அன்றி வேறு எந்த நியாயமும் இல்லை. இச் செயற்பாடு இந்நாட்டில் வாழும் ஒரு சமூகத்திற்கு எதிராக திணிக்கப்படுகின்ற அடிப்படை உரிமை மீறலாகும.
எனவே இதுவிடயத்தில் எமது உரிமையை பெற்றுக் கொள்ளும் வரை ஆட்சியாளர்களுக்கு அனுசரணை வழங்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவினை தவிர்த்துக் கொள்வதும், அதற்கெதிரான ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்துவதும், சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்று அழுத்தங்களை பிரயோகிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அரசியல் தலைமைகளை கொள்கிறேன்.
- ஹஸ்பர் ஏ. ஹலீம் -
மரணித்தவர்களை பலியாக்கி இறைவன் உயிர் வாழ்வோரை காப்பாற்றுகிறானோ தெரியாது. கொவிட் இல்லாது போனால் தேர்தல் காலத்தில் வழங்கிய இனவாத வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி வந்திருக்கும் அல்லது இனவாதிகளால் அவற்றை நிறைவேற்றுமாறு போராட்டம் நடாத்தப்பட்டிருக்கும். வாக்குறுதிகள் ஞாபகமிருக்கின்றதா?மதரசாக்களை மூடுதல், மாடறுப்பு, முகம் மூடுதல், விவாகச் சட்டம். ஹலால், இஸ்லாமிய வங்கியமைப்பு, கருத்தடை விவகாரம், பெற்றி தனியார் பல்கலைக்கழகம், அரபு மொழி, பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்கள், புனித பூமிகள், சஹ்ரான் பிரச்சினை, வாள் வைத்திருந்தோர் பிரச்சினை, எல்லைப்பிரச்சினைகள் இன்னும் மறந்தவை பல. மீதி நான்கு வருடங்களும் உயிர்வாழும் முஸ்லிம்கள் கொவிட் மூலமே காப்பாற்றப்பட போகிறார்களோ தெரியாது.
ReplyDeleteஅடக்கம் செய்தால் corona மீண்டும் பரவும் என்று இருந்தால் இலங்கை வேளிநாட்டுத் தொடர்பை புறக்கணிக்க வேண்டும் bcz foreign Adajania seyyapattawarhalil irundu mindum parawume
ReplyDelete