தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் எவரையும் நாடு துரோகிகளாகக் காணலாம் - அஜித்
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு நாடு மீது எந்த அக்கறையும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறும் எவரையும் நாடு துரோகிகளாகக் காணலாம் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதுள்ள சட்டத்தின் கீழ், தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறும் எவருக்கும் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
சில பகுதிகளில் பி.சி.ஆர் சோதனை அல்லது ஆன்டிஜென் சோதனைக்கு உட்பட பொது மக்கள் மறுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளதென அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்யலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
பத்தவைக்கப்படும் பச்சிளம் பாலகன்களுக்காக பேச நினைப்பவனையும் பயங்கரவாதிகள் பட்டம் சூட்டும் பச்சப் பைத்தியங்கள் இவனுக
ReplyDelete