Header Ads



கிழக்கில் முதல் தடவையாக, மாணவிக்கு கொரோனா


- வி.ரி. சகாதேவராஜா -

கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக மாணவியொருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்படிருக்கிறது.

கல்முனையில் மாணவியொருவரே இவ்விதம் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

அண்மையில் அக்கரைப்பற்றில் ஒரு அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம் தெரிந்ததே.

அவரது மகள்தான் தற்போது தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என்று சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சுகாதாரத்துறையினரின் ஆலோசனையைப்பெற்று பாடசாலை நடாத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக கூறினார்கள்.

இதேவேளை ஆயிரம் மாணவர் படிக்கும் தமது பாடசாலைக்கு நேற்று ஆக 36மாணவர்களே வருகைதந்ததாக அதிபர் தெரிவிக்கிறார்.

அதுவும்  தரம் 11 பரீட்சைக்கு 138மாணவர்களுக்கு ஆக 36மாணவர்கள் வருகைதந்துள்ளனர். இதேவேளை அருகிலுள்ள கல்லூரிக்கு கடந்த சில தினங்களாக எந்த மாணவரும் பாடசாலைக்கு வரவில்லை எனத் தெரியவருகிறது.

No comments

Powered by Blogger.