என்னை எரிப்பதில், என்ன இன்பம் கண்டார்கள் இவர்கள்...?
தாயே, என் சின்னக் கைகள்
மெல்லப் பொசுங்கிற்று.
உன் மார்பில் புதைந்து
பருகிய இறுதி மிடருப் பாலும்
கரியாகிக் காவியாகிக்
கரைந்து போயிற்று.
தூக்கமில்லாமல் அழும்போது
என் தலை முடியைத் தடவுவாயே.
அதுவும் எல்லையில்லா நெருப்பில்
எரிந்து சாம்பலாகிற்று.
என் பிஞ்சுக் கையில்
நீ விரலை வைப்பாய்.
அதைத் தூக்கத்திலும் நான் இறுக்கிப்
பிடிப்பேனே.அதுவும் சேர்ந்து
எரிந்து விழுந்திற்று.
புன் சிரிப்பு உதடும்
பால் வெள்ளைப் பல்லும்
கண் சிமிட்டும் இமையும்
களவில்லா நெஞ்சும்
பிஞ்சுதிரும் பாதமும்
கருகிக் கருகிக் கட்டையாய்ப்
போயிற்று.
வெயிலுக்கே வலிக்குமே
எனக்கு.
வெந்தணலில் போட்டு
வேக வைத்தார்கள் தாயே,
என்ன செய்வேன் நான்.
.புரியவை தாயே.
எனக்குப் புரியவை.
20 நாட்கள்தான்
இந்த உலகத்தைக் கண்டேன்.
என்னை எரிப்பதில்
என்ன இன்பம்
கண்டார்கள் இவர்கள்.
வலித்தது தாயே
வலித்தது.
உடெம்பெல்லாம்
நெருப்புச் சூழ்ந்து
நெஞ்சை எரித்தது.
யாரை வெட்டின என் விரல்கள்?
யாரைக் கொன்றன என் கைகள்?
பசியென்று கூடப் பேசத் தெரியாத
பிஞ்சு நான்.
யாருக்கு நஞ்சூட்டினேன் என்று
என்னை எரித்தார்கள்?
நான் வாழவும் இல்லை.
வளரவும் இல்லை.
சாம்பலாகி இன்று
சட்டிக்குள்
இருக்கிறேன்.
எரிந்த என் எலும்புகள்
முறிந்த சத்தம் கேட்டதா தாயே.
நான் தவழ்ந்து வரும் முழங்கால்கள்
உடைந்து விழுந்தன.கண்டாயா?
தொட்டிலில் தாலாட்டில்
விரல் சூப்பி உறங்கிய எனக்கு
செந்தணல் படுக்கையில்
நெருப்புக் காற்று
தாலாட்டினால்
என்ன செய்வேன்.
சொல்வேன் தாயே சொல்வேன்.
நீ அனுப்பிய வேகத்திலே
வந்து விட்டேன் ஆண்டவா,
என்னை எரித்தவர்கள்,
அவர்களுக்கு ஏதுவாய் இருந்த
எம்மவர்கள் எவரெவர் என்று
சொல்வேன் தாயே.
என்னை வாழத்தான் விடவில்லை.
சாகவும் விடாதவர்களுக்கு
நான் சாட்சியம் சொல்லுவேன்.
முடமாகிப் போன
அவர்கள் நாவுகளின்
மீது எரித்த என் சாம்பலைத்
தூவுவேன்.
உறங்குபவர்கள் உங்களில்
ஒருவர் இல்லையா தாயே,
எரிந்தவர்கள் எங்களுக்காய்
எழும்புவதற்கு?
எரித்தது நெருப்பல்ல தாயே.
உங்கள் மௌனம்தான்.
எரிந்தது நான் அல்ல தாயே
நீங்கள்தான்.
- ராஸி முஹம்மது -
ஒரு தாயையும் தீயிலிட்ட நெருப்பு.
ReplyDeleteஇப்படி உருக்கமாக போடவெண்டும்,நெஜ்ஜில் ஆணி அடித்தது போல் வலிக்குது
ReplyDeleteஒரு தந்தையாக இந்த படத்தை பார்த்து நெஞ்சு வெடிக்குது. பாதிக்கப்பட்ட தாய் தந்தை இருவருக்கும் இதை தாங்கும் சக்தியை இறைவன்அ அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.
ReplyDeleteIpdiye kavithayum eluthi news paartukitte iruppam.... Soranai ketta jenmangalayya naangal!!!! SHAME ALL OF US
ReplyDeleteSoranai kettavanugalaaa..... oru ethirppayaavathu kaata mudiyaatha..... aagivittoomaaa naangal? Ethirppu aatpaattam panna vanthavanugalayum seiyya vidaamal tavirthu athi enna INPAM kandeergal neengalum ungal Ulakka sapaigalum????, Kevalam....inthalavu eeeeenargalaneergale... "Oru kannaththil arainthaal, maru kannaththayum kudungo... Kiss pannittu pohattume....
ReplyDelete