ஜனாஸாக்கள் எரிப்பு - இலங்கை முஸ்லிம்கள், நோர்வேயில் ராஜதந்திர முயற்சி
அந்தவகையில் United Sri Lankan Muslim Association of Norway (USMAN) என்ற அமைப்பு, நோர்வே வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் இன்று 09.12.2020 கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் வாழும் முஸ்லிம்களின், விருப்புக்கு மாற்றமாக, அவர்களுக்குள்ள உரிமையை மீறி, அவர்களின் உடல்கள் பலாத்காரமாக எரிக்கப்படுவது பற்றி, நோர்வேயின் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இவற்றை மிகுந்த அவதானத்துடன் செவிமடுத்துள்ள, நோர்வே வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள்,
தாமும் இதுகுறித்த வேதனை அடைவதாகவும், இதுபற்றி சில நகர்வுகளை மேறடகொள்ளும் பொருட்டு, நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதுவரிடம் விளக்கம் கோரல், இலங்கையில் உள்ள தமது தூதுவர் மூலமாக இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் தமது வரம்புகளுக்கு உட்பட்டு விளக்கம் கோரல் மற்றும் ஜெனீவாவில் உள்ள தமது தூதுவர் மூலமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறையிடுதல் ஆகிய 3 படிமுறைகளின் அடிப்படையில் இதனை கவனத்திற் கொள்வதாகவும் உறுதியளித்துள்ளனர்.
இத்தகவல்களை பிரதிநிதி United Sri Lankan Muslim Association of Norway (USMAN) அனீஸ் ரவூப் உறுதிப்படுத்தினார்.
சிறுபான்மையினர் ஒன்றுபட்டால் நாலா பக்கமும் நின்று திக்குமுக்காடச் செய்யலாம்.
ReplyDeleteஇது போன்ற ராஜதந்திர முயற்சிகளை நோர்வேயைப் பின்பற்றி அமெரிக்கா, ஐ.இராச்சியம், ஐரோப்பிய யூனியன் உற்பட இந்தியா,சீனா நாடுகள் மூலமாகவும் இந்த இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டால் பெரும்பாலும் இந்த அநியாயத்துக்கு முற்றுப்புள்ளிவைக்கலாம்.
ReplyDeleteநோர்வே வாழ் முஸ்லிம் மக்களின் கோரிக்கைக்கு ஆதரவும் வாழ்த்துக்களும். அனீஸ் ரவூப் தொடர்ந்து முன்செல்லுங்கள்.
ReplyDeleteஅன்று சிரியாவிலிருந்து அகதியாகச் சென்று கடலில் மூழ்கி சடலமாக கரை ஒதுங்கிய ஐலான் என்ற பாலகனின் புகைப்படம் உலகளாவிய அதிர்வுகளை ஏற்படுத்தியது போன்று இக்குழந்தையது எரிப்பும் தாக்கம் கொண்டதாக இருக்க அதிகமாக பகிர்வதோடு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு எரிப்புக்கு எதிராக சாதகமான முடிவு வருவதற்கு சம்பந்தப்பட்ட சிவில் சமூகத் தலைமைகள் கரும்மாற்ற வேண்டும்.
ReplyDeleteகுறிப்பாக அரபு நாடுகள் ஒன்றியத்தினது ஒத்துழைப்பையும் பெற முயற்சிக்க வேண்டும்.