கொரோனாவால் உயிரிழந்தால் சவப்பெட்டியை இலவசமாக வழங்கி, இறுதிக் கிரியைகளை அரச செலவில் முன்னெடுக்க ஜனாதிபதி உத்தரவு
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகளை அரச செலவில் முன்னெடுக்குமாறு,சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சவப்பெட்டிகளையும் இலவசமாக வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளன.
இனம், மதம் பேதமின்றி சகலருக்கும் அரச செலவில் இறுதிக் கிரியைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளாரென, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய செலவுகளுக்கான கொடுப்பனவை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பு இறுகி விட்டது. நீதியுமில்லை நியாயமுமில்லை என்றால் ஆப்புத்தான் வைக்கவேண்டும். இந்த ஆப்பை வைக்கத்தூண்டிய அறிவுரை யாருடையதாக இருக்கும்? கையேற்கப்படாத உடல்களுக்காக மட்டும் இச்சலுகை வழங்கப்பட்டால் ஒரு இனத்திற்காகச் செய்ததாகப் போய்விடுமே அதனால் இனம் மதம் பேதமின்றி வழங்கப்போகிறார். முஸ்லீம்கள் தமது மரணச்சடங்கினைப் பணயம் வைத்து இலங்கை மக்களுக்கு பேருதவி ஒன்றினைச் செய்துள்ளனர் என பதிவு செய்யப்படுதல் வேண்டும். அடுத்த வருடம் பாதை போடும் பணத்திற்கெல்லாம் சவப்பெட்டி வாங்கிக்குமியுங்கள். ஏதாவது கட்டாயத்தின் பேரில் முஸ்லிம்களை அடக்கம் செய்ய நேரிட்டாலும் மேற்படித் திட்டத்தை நிறுத்தி விட முடியாது. அங்கேயும் ஆப்புத்தான்.
ReplyDelete