கப்றுகளில் கட்டமுடியாத வெள்ளை, கொடியை கதவுகளில் கட்டுவோம்
இலங்கை வரலாற்றில் கொடிய கொரோனாவினால் எல்லா இன் மக்களும் பாதிப்படைந்து இருந்தாலும் உயிரோடு நோயினாலும் இறந்த பின்னர் நெருப்பினாலும் வேதனைப்படும் சமூகமாக முஸ்லிம், கிறித்தவ சமூகத்தின் நிலை உள்ளது. அந்த வகையில் இறப்பிற்கு பின்னரான "அடக்க உரிமை" கேட்டு எல்லாத் தரப்பினரும் அரசியல், இயக்க , பிரதேச வேறுபாடுகள் இன்றி தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனாலும் இதுவரை எந்த உறுதியான முடிவுகளும் எட்டப்படவில்லை என்பது மிகவும் வேதனையான நிலை
#நிலைமையின்_தீவிரம்.
குறித்த அடக்க உரிமை விடயத்தில் அரசு ஒருசில சாதகமான முடிவுகளை மேற்கொள்ள முயற்சிகள் செய்தாலும் அரசியல் உள்ளக, மற்றும் சர்வதேச தலையீடுகள் அவசரமான முடிவுகளைப் பெற்றுத்தர தடையாக இருக்கின்றன..ஜனாதிபதியின் மிக நெருங்கிய சகாவான நீதியமைச்சரின் முயற்சிகள் பலனளிக்காமைக்கும் இதுவே காரணமாகும்.
#முஸ்லிம்களின் "#சமூகச்_சோகம்"
கொரனாவின் தாக்கம். பொருளாதார இழப்புக்கள் என்ற எல்லா இழப்புகளையும் விட தமது இறந்த உறவுகளுக்கு இறுதிக்கடமைகளில் குறைந்தது அடக்குதல் என்ற ஒன்றையேனும் தம்மால் செய்ய முடியவில்லை என்ற சோகம் எல்லோரது மனங்களிலும் உறுத்திக் கொண்டே இருக்கின்றது. இது ஒரு சமூகச் சோகம்.
#என்ன_நடக்கின்றது.
எரிப்பு ஆரம்பித்த நாளில் இருந்து ஏதோவொரு வகையில் அரசியல் வாதிகள். சமூகத் தலைவர்கள், ஆர்வலர்கள் தமது துக்கத்தையும் எதிர்ப்பையும் பல வழிகளில் முன்வைக்கின்றனர். விஞ்ஞான விளக்கம், உதாரண நாடுகள். அடிப்படை உரிமைகள் என பல வழிகளில் இடம்பெற்றாலும் விளைவு எதுவுமில்லை.கொரனா உடல்களை மட்டுமல்ல சாதாரண உடல்களையும் எதிர்காலத்தில் எரிக்கலாம் என்ற அச்ச நிலையும் நிலவுகிறது.
#சமூக_ஒற்றுமை
குறித்த ஜனாஸா அடக்க உரிமை விடயத்தில் முஸ்லிம் சமூகத்தில் அதற்கு ஆதரவாக யாரும் இல்லை. முழுச் சமூகமும் 100%தமது வெறுப்பைக் காட்டி நிற்கின்றது. இந்த ஒற்றுமை பாராட்டத்தக்கது மட்டுமல்ல இதுவே இன்றைய தேவையும். எமது எதிர்கால வெற்றிக்கான நல்ல அறிகுறியாக உள்ளது. ஏனைய இன் சகோதரர்களும், அமைப்புக்களும் எமக்கு உதவும் களச் செயற்பாடுகளில் இப்போது இறங்கி உள்ளனர்.
#ஆரம்பித்துள்ள_போராட்டம்
நேற்றைய தினத்தில் இருந்து ஜனாஸாக்களை பலாத்காரமாக எரித்த கொழும்பு கனத்தை மயானத்தின் சுற்று வேலியில் வெள்ளை துணி கட்டி அமைதியாக தமது எதிர்ப்பையும். சோகத்தையும் உலகிற்கு வெளிக்காட்டும் புதிய போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இதில் இன மத பேதமின்றி மக்கள் கலந்து கொள்கின்றனர்.
#நமது_பங்களிப்பு_என்ன?
தான் வாழும் சமூகத்தின் ஒரு அங்கத்தவர் இறந்தால் அவருக்கான இறுதிக்கடமையைச் செய்யும் கட்டாய சமூகக் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு ஆனால் அந்த சமூகப் பாத்திரம் இன்று மறுக்கப்பட்டிருப்பது மனதளவில் உறுத்துகிறது. இதற்கு யாரையும் பழி கூறிக் கொண்டும். வசைபாடிக் கொண்டும் இருக்கும் காலம் கடந்து விட்டது...எமது மனக் குறையை நிவர்த்திக்கவும் எமது சோகத்தையும். எதிர்ப்பையும் வெளிக்காட்டவும் நாம் வசிக்கும் வீடுகளின்,வியாபாரத் தலங்களின் பிரதான கதவில்(Main Gate) வெள்ளை நிற கொடிகளைப் கட்டி எமது மன உணர்வுகளை அமைதியாக வெளிப்படுத்துவோம்.
உடல்கள் அடக்கப்பட்ட கப்றுகளில் கட்ட முடியாது போன கொடிகளை எமது கதவுகளில் கட்டுவோம். இதனை ஊடகங்களிலும். ஏனைய சமூக தளங்களிலும் பரப்புவோம். துருக்கி தொப்பி போராட்டம் வன்முறை இன்றி மக்கள் ஆதரவில் உலக ஏகாதிபத்தியத்தின் மனச் சாட்சியை அசைத்து வெற்றி அடைந்தது போல எமது "#வெள்ளை_கொடி போராட்டமும் மக்கள் ஆதரவுடன் நிச்சயம் வெற்றி அடையும் அதற்கு எம் எல்லோரது ஒத்துழைப்பும் அவசியம்.
சமூக அமைப்புகளும். சமய நிறுவனங்களும். அரசியல் கட்சிகளும் இந்த மக்கள் உணர்வுப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள்.
ஆர்வமுள்ளவர்கள் ஊடகங்களில் எல்லோரையும் ஊக்கப் படுத்துங்கள் புகைப்படங்களைப் பிரசுரியுங்கள். ..
இது வேறு வழிகளில் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளின் கொந்தளிப்பாக இருக்கட்டும். ...
இது யாருக்கும் சொந்தமான போராட்டம் அல்ல, எம்மோடு ஒன்றாக இருந்து கடாடாயத் தீயினால் கருகிப்போன எமது சகோதரங்களுக்கான இறுதி வழியனுப்பலாக அமையட்டும்....இந்த சமூக அசைவும் போராட்டத்தில் எமது மனச்சாட்சியே எமது மனத்திருப்தி யாக அமையட்டும்...
எங்களது வேதனையையும், வேறுபாட்டைம் களைய வெள்ளை கொடியின் கீழ் ஒன்றிணைவோம்...
(ஆக்கபூர்வமான கருத்துக்களே எதிர்பார்க்கப்படுகிறது)
13:12:2020
But President has now the supreme power by 20+ then!!!!
ReplyDelete