என்னுடைய பெயர் "முஹம்மது அலி" - பழைய பெயரின் மீது அலிக்கு, என்ன இவ்வளவு கோபம்..?
பெரும்பாலும் அலி தன் வெற்றிக்கு தேவையான அளவை விட ஒரு அடியும் எதிராளி மேல் விழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர்.
எதிராளி மயங்கி விழும்போது அடிக்க மாட்டார், விழுந்து எழும் வரை சீண்ட மாட்டார். எதிராளிக்கு முடியாத நிலை வரும்போது அவரே நடுவரிடம் போட்டியை முடிக்க வேண்டுகோள் வைப்பார். அதனாலயே அலியிடம் தோல்வியுற்றவர்கள் கூட அவரை பெரிதும் நேசித்தனர்.
உலக பிரசித்தி பெற்ற George foreman என்னும் ஜாம்பவான் உடனான சண்டையில் தோல்வியுற்ற foreman "the greatest of all his punch was the one not landed, when i was falling" என்பார்.அதாவது ஃபோர்மேன் நாக்அவுட் ஆகி நிலைதடுமாறி கீழே விழுகின்ற நேரத்தில் அலி முழு வேகத்தில் கையை ஓங்கி குத்த செல்வார்,ஒரு விநாடி சுதாரித்து ஃபோர்மேனின் நிலை கண்டு ஓங்கிய கையை அப்படியே நிறுத்தி விடுவார். அதை தான் ஃபோர்மேன் சிலாகித்து கூறுவார்.
இப்படியாகபட்ட அலி ஒரே ஒரு போட்டியில் மட்டும் எதிராளியை அவரின் நிலைக்கும் மீறி கடுமையாக தண்டித்தார்.நினைத்தால் நாக்அவுட் செய்து போட்டியை முடித்திருக்க முடியும்,ஆனால் அலி அதை செய்யவில்லை,என முகம் சுழித்தவாரே பத்திரிக்கைகள் எழுதின.
போட்டிக்கு முன் நடத்தபடும் பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே"உன்னை நான் கடுமையாக தண்டிப்பேன்"என்ற சூளுரைத்தார்.
ஏன் அப்படி செய்தார் ?
ஒரே ஒரு காரணம் மட்டும் தான்.Terell,அலியை "முஹம்மது அலி"என்று தற்போதைய பெயரை சொல்லி அழைக்காமல் அவருடைய பழைய பெயரான Cassius clay என்று அழைத்தார்.பல தடவை அலி தன்னுடைய தற்போதைய பெயரை கூறுமாறு வற்புறுத்தியும் Terrell மறுத்துவிடுவார்.அது மட்டும் தான் காரணம்.
போட்டி நடைபெற்றது.அந்த போட்டியில் ஒவ்வொரு அடியின்போதும்"say my name","What is my name" என்று ஆக்ரோசமாக தான் சண்டையிட்டார்.அந்த சண்டையே "whats my name fight” என்றே அடையாளப்பட்டு போனது.
அப்படி என்ன பழைய பெயரின் மீது அலிக்கு இவ்வளவு கோபம் ?
அந்த காலக்கட்டத்தில் ஒரு வழக்கம் கடைபிடிக்கபட்டு வந்தது.கருப்பினத்தவர்கள் பண்ணை அடிமையாக பயன்படுத்தபட்டு வந்தனர்,அப்படி எஜமானர்களுக்கு விசுவாசமான அடிமையாக வாழ்ந்த கருப்பர்களை விருப்பத்தின் பெயரில் விடுதலை செய்வார்கள் முதலாளி வெள்ளையர்கள்.
அப்படியாக விடுதலை பெற்ற கருப்பர்கள் தன் பெயருக்கு பின்னால் அந்த வெள்ளை எஜமானரின் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.அந்த பெயரே அவரது சந்ததியினருக்கு குடும்ப பெயராகவும் தொடரும்.அப்படி விடுதலை பெற்ற குடும்பம் தான் அலியின் குடும்பமும்,விடுதலையளித்த எஜமான வெள்ளையரின் பெயர் தான் "Clay".
அந்த பெயரை அடிமை சின்னத்தின் அடையாளமாக பார்த்தார் அலி.உண்மையில் அது அடிமைச்சின்னம் தான்.அதனாலயே தன்னுடைய பெயரை முதலில் Cassius X என்று மாற்றினார்.இது Malcom X உடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பால் மாற்றிய பெயர்.பின்னர் இஸ்லாமிய மதம் மாறிய பின் தன் பெயரை முஹம்மது அலி என்று மாற்றிக்கொண்டார்.
இந்த பெயரை கூற மறுத்து,அடிமை பெயரை கூறிய Terrell ஐ தான் அலி தண்டித்தார்.வெறும் பெயருக்கு கூட அலி அத்தனை போராட வேண்டியிருந்தது.
வெள்ளையர்களுக்கு எதிராக செயல்படுவதாக அவரை கைது செய்ய FBI திட்டம் தீட்டியது,அவரை பல நாட்களாக கண்காணித்தும் வந்தது.இத்தனையும் தனி ஆளாக எதிர்கொண்டார்.அலி அடிமைத்தனங்களை உடைத்தெறிந்தவர்.அவர் ஒரு கலகக்காரன், புரட்சியாளன்..
Ali is not just a sportsperson,
he is a rebellion...
பதிவர் - மு.சித்திக்
Post a Comment