முஸ்லீம்களின் உடல் தகனம், சீற்றம் அதிகரிக்கின்றது - அமல்ஜெயசிங்க
- ஏஎவ்பி - அமல்ஜெயசிங்க -
கொரோனாவினால் உயிரிழந்த குழந்தை உட்பட 75 முஸ்லீம்களின் உடல்கள் இஸ்லாமிய மத நம்பிக்கைகள் மற்றும் குடும்பத்தவர்களின் விருப்பங்களிற்கு மாறாக தகனம் செய்யப்பட்டமை குறித்து இலங்கையில் சீற்றம் அதிகரிக்கின்றது.
கொரோனாவால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களையும் தகனம் செய்யவேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்- உயிரிழந்தவர்கள் முஸ்லீம்களாகயிருந்தாலும் அவர்களது உடல்களை தகனம் செய்யவேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லீம்கள் வழமையாக உயிரிழந்தவர்கள் மெக்காவை பார்க்கும் திசையில் அடக்கம் செய்வது வழமை.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து இலங்கை விடுத்த வேண்டுகோளை ஏற்று முஸ்லீம்களின் உடல்களை தனது நாட்டில் அடக்கம் செய்வதற்கு தயார் என மாலைதீவு தெரிவித்துள்ளது.
கொரோhனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்காக விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு ஸ்தாபனம் கரிசனை வெளியிட்டுள்ளதுடன் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை குடும்பத்தவர்கள் தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்லாமிய மதத்தினால் தடை செய்யப்பட்டுள்ள இந்த நடைமுறையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் அடிப்படையிலான இறுதிசடங்குகளை மதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீர் மாசுபடலாம் என முக்கிய பௌத்தமதகுருமார் கரிசனை வெளியிட்டதை தொடர்ந்தே கடந்த ஏப்பிரல் மாதத்தில் இந்த உடல்களை புதைப்பது நடைமுறைக்கு வந்தது.
கொரோனாவால் உயிரிழந்த 19 முஸ்லீம்களின் குடும்பத்தவர்கள் உடல்கனை பொறுப்பேற்க மறுத்ததை தொடர்ந்து சட்டமா அதிபர் உடல்களை தகனம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
20மாத குழந்தையின் உடல் உட்பட 15 முஸ்லீம்களின் உடல்கள் இதுவரை தகனம் செய்யப்பட்டுள்ளன- பெற்றோர்களின் மன்றாட்டத்திற்கு மத்தியிலும் குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
குழந்தையின் உடலை தகனம் செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு தாஙகள் கட்டாயப்படுத்தப்பட்டதாக குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர்,தாங்கள் அதனை நிராகரித்தவேளை குடும்ப உறவினர்கள் எவருமில்லாத நிலையில் அதிகாரிகள் உடலை தகனம் செய்தனர்.
கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்கள் ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர் என கருதும் முஸ்லீம்கள் மற்றும் மிதவாதிகளிற்கான அடையாளமாக அந்த குழந்தை உறங்கும் படம் மாறியுள்ளது.
குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளமை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாகிர் மௌலானா கேள்வி எழுப்பினார்.
நான் வெறுப்புனர்விற்கு அப்பால் சென்றுவிட்டேன் மனம் உடைந்தவனாகவும் இருக்கின்றேன் இன்னும் எவ்வளவு கொடுமைகளையும் காட்டுமிராண்டித்தனத்தையும் நாங்கள் சகித்துக்கொள்ளவேண்டியுள்ளது என அவர் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாரஇறுதியில் அதிகாரிகள் கொழும்பில் உள்ள மைதானத்தின் வெளிப்புற வாயில்களில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக வெள்ளை துணிகளை கட்டினார்கள்- இன்று அதனை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
இது குறித்து இணையத்தில் அதிருப்தி வெளியாகியுள்ளது.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி தகனம் 20 நாள் குழந்தை தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டப்பட்ட வெள்ளை துணிகளை கனத்தையின் பேய்கள் அகற்றியுள்ளன என மங்களசமரவீர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Many mistakes in the article! For example, not 20 months baby but 20 days
ReplyDelete