முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பில், முஸ்லிம்களுக்கு ஞாபகமறதி அதிகமா..?
- அலி உதுமான் அலி அக்ரம் -
சாணக்கியன் எனும் துடிப்புள்ள இளம் பாராளுமன்ற உறுப்பினரின் பேச்சால் எல்லோரும் ஒரு விதமாக குழம்பியுள்ளார்கள். அவருடைய 30 நிமிட பேச்சை நானும் ஓரிரு தடவைகள் பார்த்தும் ரசித்தேன்.
அவர் கடைசி நேரத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பற்றியும் பேசுகிறார், அங்குள்ள “இஸ்லாமிய” பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக வெட்கித் தலைகுனிவதாகவும் கூறுகிறார்.
சாணக்கியன் எந்த நோக்கத்திற்காக இவ்வாறு முஸ்லிம்கள் பற்றி கதைத்திருந்தாலும் அவர் கதைத்ததெல்லாம் உண்மை. எனவே பெரும்பாலான முஸ்லிம்கள் தம்மைப்பற்றி ஒருவர் பாராளுமன்றத்தில் கதைத்திருக்கிறார் என்று முகப்புத்தகத்திலும் வட்ஸ்அப் போன்ற ஊடகங்களிலும் சந்தோசப்பட்டனர்.
எனினும், சமூகத்தின் விடிவுக்காக நாங்கள் பாராளுமன்றம் அனுப்பிய சில உறுப்பினர்களின் கூஜா தூக்கிகளும் ஒரு சில உள்ளுர் அரசியல்வாதிகளும் சாணக்கியனின் பேச்சுக்கு வரைவிலக்கணம் கொடுத்து ஏதோ இரவோடிரவாக அவர் இலங்கை முஸ்லிம்களின் வாக்கு வங்கிகளையும் கொள்ளையடித்துவிடுவார் என்ற பயத்துடன் முகப்புத்தகத்தில் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் கூஜாக்கள் மற்றும் உள்ளுர் அரசியல்வாதிகளுக்கும் கூறுவது என்னவென்றால், நீங்கள் நினைப்பது போல் ஒரு நாளும் நடக்காது. முஸ்லிம்கள் ஒரு நாளும் சாணக்கியனுக்கோ அல்லது பொன்னம்பலத்திற்கோ வாக்குப்போட மாட்டார்கள்.
பெரும்பாலான (கிழக்கு) இலங்கை முஸ்லிம்கள் ஞாபகமறதி எனும் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த தேர்தல் வரும் தறுவாயில் மக்களுக்கு எல்லாம் சரியாக மறந்துவிடும். ஆயிரம் விளக்குடன் ஆதவன் தன் பரிவாரங்களுடன் வருவான், மயில் மற்றும் மற்றைய விலங்கினங்களும் வரும். பிரதேசவாதமும் ஊர்வாதமும் வாக்குகளுக்கு வடிவம் கொடுக்கும்.
தற்போது இருக்கின்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களாகிய நீங்களே மீண்டும் பாராளுமன்றம் செல்வீர்கள், சமூகப்பிரச்சினைகளுக்காக வாய் திறக்க மாட்டீர், உங்களுக்காகவும் உங்கள் பரம்பரைக்காகவும் சொத்துச் சேர்ப்பீர், சமூகத்தை விற்று “டீல்” பேசுவீர்.
இன்னொரு சாணக்கியனோ அல்லது "லியனகே"யோ அவர்களுக்காக சில வார்த்தைகளைப் பேசும் போது முஸ்லிம்கள் தற்காலிக சிற்றின்பம் கொள்வார்கள். ஆனால் உங்கள் கொஞ்சப்பேரைத் தவிர அவர்கள் யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். ஏனெனில் முஸ்லிம்களுக்கு அரபியில் பெயர் வைத்த, தன் ஊரான் பாராளுமன்றம் செல்ல வேண்டும், தன் பிரதிநிதி அதற்குப்பிறகு என்ன செய்தாலும் சரி.
Realy
ReplyDeleteஅலி உதுமான் அக்ரம் அவரகளே, நான் எழுத பேச நினைத்ததை அப்படியே எழுதியிருக்கின்றீர்கள். முஸ்லிம்களில் படித்தவரகளும் படிக்காதவரகளும் செல்வந்தர்களும் ஏழைகளும் ஒரேவிதமான மனநிலையிலேயே இருக்கின்றார்கள. சுமந்திரன் Sir அவரகளுக்கோ அல்லது தம்பி சாணக்கியனுக்கோ பாராளுமன்றம் செல்ல எந்த அளவிலும் முஸ்லிம்களின் வாக்குகள் அவரகளுககுத் தேவையில்லை. அவரகள் கடந்த காலஙகளில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் முஸ்லிம் சமூகத்திற்காக பேசியதில் 1% த்தைத் தன்னும் எமது முஸ்லிம் தலைவர்கள் எனக்கூறப்படுவோர் ஆகக் குறைந்தது வெளியிலேனும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக மற்றும் அவரகள்மீது திணிக்கப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக பேசியிருபபார்களா? ஆயினும் எப்படியும் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்துவிடுவார்கள். புதிய உறுப்பினர்கள் யாராவது இதில் உள்ளடங்கியிருந்தால் "தற்காலிகமாக" தங்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் "சலுகை" களுக்காக தம் மக்களின் உரிமைகளை விற்றிருப்பார்கள். நாங்கள் இப்படியான ஊடகங்களில் எதனை எழுதினாலும் நாலரை வருடங்களுக்குப் பின்னர் ஒரு இடைவெளி வரும். எழுதியவர் கூறியதுபோல் அந்த இடைவெளியில்த்தான் முஸ்லிம்கள் தம் பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பர். இவரகளுக்கு எல்லாம் தேர்தல் என்பது எல்லாம் waste. மிக முக்கியமாக இந்த ஆறு உறுப்பினர்களும் 20A க்கு ஆதரவாக ஏன் வாககளித்தனர் என்பதனை இதுவரை வெளிப்படுத்தவில்லை. இதனை எத்தனை முஸ்லிம் மக்கள், புத்திஜீவிகள் எதிர்த்து மறு அறிக்கை விட்டனர். எங்கெல்லாம் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. முஸ்லிம்கள் முஸ்லிம்களாலேயே அடக்கி வைக்கப்பட்டுள்ளனர். சாதாரண முஸ்லிம் மக்கள் வாயையும் சூத்தையும் பொத்திக் கொண்டு போக வேண்டியதுதான். அந்தளவுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளினால் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளனர். அதிசிறந்த நாடக ஏன் சினிமாவிலும் நடிக்க மிகவும் பொருத்தமானவர்கள்தான் எமது முஸ்லிம் அரசியல்த் தலைவர்கள்.
ReplyDeleteYes this is the fact
ReplyDeleteதொடர்ந்தும் இவ்வாறானவர்களை தெரிவு செய்வதன் மூலம்
ReplyDeleteஎமது சமூகம் தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்து கொள்கின்றன .
Well Said
ReplyDeleteகிழக்கிலங்கையணுக்கு மூளை பத்தாது தான்
ReplyDeleteWell said
ReplyDeleteசபாஷ் பொருத்தமான பதிவு ஆயிரம் விளக்கு ஆதவன் கதையெல்லாம் எம் தலைவர் அஸ்ரபோடு முடிந்து விட்டது என்பதை ஏமாளி முஸ்லிம் சமூகம் உணராத வரை வயிரு வளர்க்கும் சமூகத் துரோகிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதை யாராலும் தடுக்க முடியாது சாணக்கியன் எம்.பியின் உரை கேட்டும் இவர்கள் உயிரோடு இருப்பதொன்றும் அதிசயமல்ல இதுதான் அவர்களது வாழும் வழி
ReplyDeleteமுஸ்லீம் தலைவர்கள் சாணக்கியன் ஐயா பேசிதை விட ஆக்ரோஷமாக பேசியிருக்கின்றார்கள் தான் ஆனால் பிற மதத்தவர் பேசும் போது பெறுமானம் அதிகம் என்பது தான் கணிதம். சில விடயங்களில் இராஜதந்திரங்கள் கையாளப்படல் வேண்டும். தேர்தல் வெற்றியின் தன்மை, வெற்றி பெறச்செய்தவர்களின் எதிர்பார்ப்பு, தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் இதில் ஆதிக்கம் செலுத்தும். தெருச்சண்டியன்கள் போல் சில சந்தர்ப்பங்களில் நடந்து கொண்டால் சாதமாக அமையவிருக்கும் விடயங்களும் சிக்கலாக மாறிவிடும்.முஸ்லீம் தலைவர்கள் இது தொடர்பாக பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் விசுரூபப்படுத்தி செய்திகள் சொல்ல கழுகுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. சிங்கள இனவாதிகள் வெறுக்கின்ற ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் தறுதலை ஜனாதிபதி சாதமான செய்தி சொல்லியிருக்கிறார் என நீதி அமைச்சரை மேற்கோள் காட்டி சொன்ன செய்தி எவ்வளவு பெரிய விஷ்வரூபம் எடுத்து ஆடியது என்பது தினந்தோறும் செய்திகள் படிப்போருக்கு புரிந்திருக்கும். இறுதியில் ஜனாதிபதி செயலகத்தால் மறுப்பறிக்கை விடவேண்டிய நிலையும் ஏற்பட்டது. சிந்திப்போம் செயல்படுவோம்.
ReplyDelete