ஒருங்கிணைப்பாளர்கள் என கூறி மோசடி, எம்மாவட்டத்துக்கும் எவரும் நியமிக்கப்படவில்லை, கிழக்கு மாகாணத்தில் அதிகம்
பொதுஜன பெரமுனவின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் எனக் கூறி சிலர் மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளார்கள். பொதுஜன பெரமுனவின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் எவரும் எம்மாவட்டத்துக்கும் நியமிக்கப்படவில்லை. எனவே பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று -07- திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
பொதுஜன பெரமுனவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எனக் கூறி தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக ஒரு சிலர் மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளார்கள். இவ்வாறான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இவ்விடயம் குறித்து கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கடந்த மாதம் 30 ஆம் திகதி முறைப்பாடளித்துள்ளோம்.
பொதுஜன பெரமுனவின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் என எவரும் எம்மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டவில்லை. எனவே பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.
Then, what about the appointment of Karuna as District Co-ordinator for Ampara and Batticaloa Districts by letter dated 13th October, 2020 from the Prime Minister's Office which was reported by the Media?
ReplyDeleteWho is trying to fool whom?