சுவனத்தில் காத்திருப்பேன்...!
- யாழ் அஸீம் -
உம்மா! வாப்பா
உங்கள் கண்ணீரைத் துடைத்து விடுங்கள்!
உயர்வான சுவனத்துக்குச்
சென்று கொண்டிருக்கின்றேன்
சுவனத்து வாசலில்-உங்களை
வரவேற்கக் காத்திருப்பேன்
கவலைப்படாதீர்கள்-அந்தக்
கயவர்களின் கட்டளைக்கு நீங்கள்
கையெழுத்திட்டிருந்தால்
கவலைப்பட்டிருப்பேன்
உறுதியான
உங்கள் ஈமானின் முன்
அவர்கள் தோற்று விட்டார்கள..
உம்மா!
உதடுகள் உச்சரித்த
உயிரிலும் மேலான
உயர் கலிமாவுக்காகவன்றி..
முஸ்லிமாய்-இம் மண்ணில்
பிறந்ததற்காகவன்றி
வேறெதற்கு என்னை
எரித்தார்கள் உம்மா!
உயிரிலும் மேலான
உயர் கலிமாவுக்காகக்
கையெழுத்திட மறுத்த
என் ஈமானியப் பெற்றோரே!
நீங்கள் வெற்றி
பெற்று விட்டீர்கள்!
ஒரு ஈமானியப் பெற்றோருக்கு
பிறந்ததற்காக
பெருமைப்படுகிறேன் உம்மா!
கஃபத்துல்லாஹ்வுடைய
ரப்பின் மீது ஆணையாக
வெற்றி பெற்று விட்டேனென-தம்
இன்னுயிரை அர்ப்பணித்த
உத்தம சஹாபாக்கள் வழியில்
வெற்றி பெற்றுவிட்டீர்கள்!
உம்மா!
எனக்குத் தெரியும்
எனை எரித்த
கயவர்களின் நெருப்பைவிட
உங்கள் நெஞ்சிலே
கனன்றெழும் நெருப்பு
வெம்மையானது..
எனை எரித்த நம்ரூதுகள்-உன்
இதயத்து நெருப்பில்
எரிந்து கருகும் நாள்
தூரத்திலில்லை.
என் இனிய பெற்றோரே!
அந்தக் கொடியவர்கள்
நெருப்பை விதைத்து விட்டார்கள்!
விதைத்ததை அவர்களே
அறுவடை செய்வார்கள்!
ஏந்துகின்ற எங்கள் கரங்களும்
சிந்துகின்ற கண்ணீர்த்துளிகளும்
இறைவனை எட்டும் வேளை
அழிவார்கள் ஒரு நாளில்!
This must be translated and we should keep sharing. May allah grant hidayah to everyone
ReplyDelete