Header Ads



உயிருடன் இருக்கின்றனரா இல்லையா..? உண்மை நிலவரம் தெரியாத நிலையில் மஹர சிறைக்கைதிகளின் குடும்பங்கள்


- சண்டே டைம்ஸ் -

மஹர சிறைச்சாலையில் கொல்லப்பட்டவர்களாக கருதப்படுபவர்களின் உடல்களை புதைப்பது குறித்த நீதிமன்ற உத்தரவு அடுத்த வாரமே வெளியாக உள்ளதால் குடும்பத்தவர்கள் மேலதிக தகவல்களிற்காக காத்திருக்கின்றனர்.

மஹரசிறையில் கொல்லப்பட்டவர்கள் சிலர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் என்கின்ற போதிலும் அவர்களின் உடல்களை தகனம் செய்யக்கூடாது என சிறைக்கைதிகளிற்கான மனித உரிமை செயற்பாட்டாளர் சட்டத்தரணி சேனஹ பெரேரா நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

இதனை தொடர்ந்து இது குறித்த விசாரரணைக்காக வெள்ளிக்கிழமை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதியொருவரை சமூகமளிக்குமாறு வத்தளை நீதவான் உத்தரவிட்டார் எனினும் சட்டமா அதிபர் திணைக்களத்தை சேர்ந்தவர் சமூகமளிக்காததை தொடர்ந்து விசாரணைகள் 11 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மஹரசிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்தால் முக்கியமான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிடும் என சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் சேனக பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மஹர சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் தாய்மார்களும் மனைவிமார்களும் தங்கள் குடும்பத்தவர்களின் நிலை குறித்து அறிவதற்காக காத்திருந்தனர்.

தங்கள் உறவுகள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியாத நிலையிலேயே அவர்கள் காணப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் கொல்லப்பட்டவர்களின் விபரங்களை பொலிஸார் வெளியிடவேண்டுமென அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

கலவரம் இடம்பெற்ற மறுநாள் தனது மகன் பிணையில் விடுதலையாகியிருக்கவேண்டும் என சப்புகஸ்கந்தை பட்டிவிலலை சேர்ந்த டீகே பிரேமலதா என்பவர் தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் அவர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை பிணையில் எடுப்பதற்காக மஹரசிறைச்சாலைக்கு செல்லுமாறு என்னை கேட்டுக்கொண்டார் என தெரிவித்தார் என பிரேமலதா குறிப்பிட்டார்.

ஆனால் குறிப்பிட்ட தினத்தில் கொரோனா வைரஸ் காரணமாக அவர்கள் எனது மகனை நீதிமன்றத்திற்கு கொண்டுவரவில்லை என தெரிவித்த அவர் நான் மறுநாள் எனது மகனின் விடுதலைக்காக சிறைக்கு சென்றேன் எனவும தெரிவித்தார்.

நான் எனது மகன் குறித்து சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் கேட்டேன், அவர்கள் எனது தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்டு என்னை தொடர்புகொள்வதாக தெரிவித்தனர் ஆனால் நான்கு நாட்களாக அவர்கள் என்னை தொடர்புகொள்வில்லை என அந்த தாய் கதறினார்.

களனியைசேர்ந்த என்எஸ் பெரேரா என்ற பெண்மணி தனது கணவரை தேடிவருகின்றார், கலவரம் இடம்பெற்று மறுநாள் தனது கணவர் விடுதலையாகியிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனது கணவர் ஜனவரியிலிருந்து சிறையிலிருக்கின்றார்,அவர் பிரசன்னமாகாமலேயே நீதிமன்ற வழக்கு இடம்பெற்றது இதன் காரணமாக நான் தொடர்ச்சியாக நீதிமன்றம் சென்று வந்தேன் என அவர் தெரிவித்தார்.

கலவரம் இடம்பெற்ற மறுநாள் நான் எனது கணவரை பிணையில் விடுதலை செய்வதற்காக சென்றவேளை எனது கணவர் உயிருடன் இருக்கின்றாரா எனபதை உறுதி செய்யுமாறு சட்டத்தரணி கேட்டார் என அந்த பெண்மணி தெரிவித்தார்.

எனினும் காயமடைந்தவர்களின் பட்டியலில் எனது கணவர் பெயர் இருக்கவில்லை , கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களை பார்த்தேன் அதிலும் அவர் படம் இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.