"கொரோனாவை காரணம் காட்டி எதிர்தரப்பினர், இனவாதக் கருத்துக்களை தோற்றுவித்துள்ளார்கள்"
(இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுகிறது. இனவாத கருத்துக்களை சமூகத்தின் மத்தியில் எதிர்த்தரப்பினரே தோற்றுவித்துள்ளார்கள் என தேசிய மரபுரிமை, கிராமிய கலை அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை காரணம் காட்டி எதிர்தரப்பினர் சமூகத்தின் மத்தியில் இனவாதக் கருத்துக்களை தோற்றுவித்துள்ளார்கள்.
தேசிய மரபுரிமைகளையும், மக்களின் கலாசாரத்தையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய மரபுரிமை என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தொல்பொருள் சின்னங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுள்ளன. இவை குறித்து உரிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
அனைத்து இன மக்களின் தேசிய மரபுரிமை மற்றும் கலைகலாசாரங்கள் பாதுகாக்கப்படும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் எந்த ஓர் இனத்தின் உரிமைகளும் பாதிக்கப்படவில்லை என பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார். ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
இனவாதத்தின் அடுத்த பக்கமாக இவரும் செயற்படத் துவங்கியுள்ளார்.இவருடைய பாணி தனியானது.இரண்டுபக்கத்தையும் ஒரே நேரத்தில் சமாளிக்க எடுக்கும் முயற்சி, ஆனால் குப்ர் அனைத்தும் ஒரே பாதையில் ஒரே இலக்குடன் பயணிககின்றார்கள் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள மிக நீண்ட காலம் செல்லாது.
ReplyDelete