Header Ads



முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பது, அலி சப்ரியின் டுவிட்டர் பதிவு, அந்த விடயத்தில் இலகுவில் தப்ப முடியாது - சுமந்திரன்


சிறுபான்மையினர் மாற்றாந்தாய் பிள்ளைகளாக பார்க்கப்படுகின்றனர் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

நீதியமைச்சர் அலி சப்ரி மற்றும் முன்னாள் நீதியமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோருக்கு இடையில் இன்று பாராளுமன்றத்தில் கடுமையான வாதபிரதி வாதங்கள் இடம்பெற்றன.

இவர்களின் உரையை தொடர்ந்து உரையாற்றிய சுமந்திரன், குறித்த இருவரின் உரை மூலம் நீதித்துறை தொடர்பில் உள்ள விசுவாசம் குறைமதிப்பிற்கு உள்ளாவதாக கூறினார்.

“முன்னாள் நீதியமைச்சர் மற்றும் தற்போதைய நீதியமைச்சர் ஆகியோருக்கு இடையில் கடும் வாதங்கள் இடம்பெற்றன. அதன் மூலம் நீதித்துறையை குறைமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டது. நாட்டின் நீதித்துறையை மையப்படுத்தியே நாடு அளவிடப்படுகின்றது. சிலவேளைகளில் நீதித்துறையில் சில அரசியல் தலையீடுகள் இருக்கின்றன. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை அணுகுவதும் பெரும்பான்மை மக்களின் பிரச்சினையை அணுகுவதற்கும் இடையில் வேறுப்பாடு உள்ளது. முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பது குறித்து நீதியமைச்சர் டுவிட்டரில் பதிவொன்றை இட்டு கவலையளிப்பதாக தெரிவித்து அந்த விடயத்தில் இருந்து இலகுவில் தப்பிக்க முடியாது. ஜனநாயகம் உள்ள நாடு என கூறிகொள்ளும் இலங்கையில் சிறந்த நீத்துறை கட்டமைப்பு உள்ள நாடு என கூறிக்கொள்ளும்ட இலங்கையில் சிறைக்கைதிகள் கொல்லப்படும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டணை கிடைக்காமயிருப்பது எப்படி? இது எந்தவொரு நாட்டிலும் நீதித்துறை அவமதிக்கப்படுவதற்கு சமமாகும். ஒரு நாட்டின் சிறைக் கைதிகள் எவ்வாறு கவனிக்கப்படுகின்றார்களோ அதை வைத்தை நாட்டை மதிப்பார்கள் என வின்ஸ்டன் சேர்ச்சில் கூறியுள்ளார்” என்றார். Hub 

3 comments:

  1. Ali Sabri is an agent for MR family ..
    He does care about people or anyone .
    He cares about his post

    ReplyDelete
  2. Neenga vera..... mala pencha enna peyaatti enna....

    ReplyDelete
  3. kool mutta nazeer ahahmmed mp,lazy harries mp, bonda bada fizal cassim mp, including another mp shuold burn and cut off their head, for supporting ammendmend 20 constitutional , these beggers do bussiness export and import , protect their bussiness thos who done support , not care of muslim community , when election period , by their toilet mouth had been scloding against rajapaksa thugs mapiy

    ReplyDelete

Powered by Blogger.