Header Ads



6 பெண்கள் காத்தான்குடியில் கைது - சஹ்ரானிடம் தற்கொலை தாக்குதல் பயிற்சி பெற்றார்களாம்...!


(எம்.எப்.எம்.பஸீர்)

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதானியாக கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரான் ஹஷீமின், அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்று, தற்கொலை தாக்குதல்கள் உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றதாக கூறப்படும் 6 பெண்களை  பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். 

பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பயங்கரவாத  தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன. 

பெண்ணொருவரும் அவரது 3 மகள்மாரும், இரு மருமகள்மாரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் நேற்று,  கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்டதாக அந்த தகவல்கள் கேசரிக்கு தெரிவித்தன.

அண்மையில், மட்டக்களப்பு விஷேட பொலிஸ் குழுவினர்,  பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நடாத்திய சிறப்பு நடவடிக்கையில் 20 வயதான இளைஞர் ஒருவரைக் கைது செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளில், வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த ஆறு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே 21/4 தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் என அறிய முடிகின்றது.

இந்த 6 பெண்களும் கைது செய்யப்பட்ட விவகார விசாரணைகளில் ஏற்கனவே 15 ஆண்களும் மூன்று பெண்களுமாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே தற்போது மேலும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத  தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம்,  பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு மற்றும்  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸின் ஆலோசனைக்கு அமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

4 comments:

  1. this is nothing but a show off .

    ReplyDelete
  2. வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இது போதும் இனி சிங்கள ஊடகங்களுக்கு தூள் பரத்துவார்கள்.நாம் வெந்துபோகவேண்டியதுதான்.

    ReplyDelete
  3. மற்றவர்களை மதிக்கவும், மரியாதை செலுத்தவும் சொல்லிகொடுக்காத ஒரு மார்க்கப் பிரிவின் பின்னால் செல்வது தற்கொலை செய்வதற்கும், தற்கொலைதாரி என்ற பெயர் பெறவும் வழியமைக்கும் என்ற எளிய தர்க்கம் இதன் மூலம் புரிந்து கொள்ளப்படுகின்றது. மற்றவர்களை மதிக்கின்ற மரியாதை செய்கின்ற சமூகம் நிம்மதியாக வாழ முடியும். நமக்கு மிகப் பரிச்சயமான சிங்கப்பூர், ஜப்பான் நாடுகள் மற்றவர்களை மதிப்பதன் மூலமும் மரியாதை செய்வதன் மூலமும் மட்டுமே வெற்றியடைந்தன. இதற்கு சுயநலம் குறைந்த நற்குணங்களைக் கொண்ட அரசியல், சமூக மற்றும் சமயத்தலைவர்கள் உருவாக வேண்டும். நடக்குமா?

    ReplyDelete
  4. குற்றம் நிரூபிக்கபடும்வரைக்கும் சந்ச்தேகத்தின் பேரில் கைது செய்யபடுகிற தமிழர்கள் நலன்களை தமிழ் சிவில் சமூகம் விட்டுக் கொடுத்ததில்லை. தமிழ் அரசியல் தலைமையும் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளும்கூட சந்தேக நபர்களை கைவிட்டதில்லை. முஸ்லிம் அரசியல் தலமை செயலிழந்துபோயிருக்கும் இந்த தருணத்தில் முஸ்லிம் சிவில் சமூகத்தை கட்டி எழுப்புகிற பணியையும் சந்தேக நபர்களின் நலன்களை பேணும் பணியையும் முஸ்லிம் வளக்கறிஞட்ர்கள் முன்னெடுக்கவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.