Header Ads



கொரோன சிகிச்சைக்கு போன இடத்தில், குணமடைந்த பின் 4 பேர் இணைந்து செய்த காரியம்



வாழைச்சேனை புனானை கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்த நான்கு பேர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சிகிச்சை நிலையத்தில் பொருட்களை திருடிய குற்றத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

வாழைச்சேனை புனானை கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த குறித்த கொவிட் தொற்றாளர்கள் நான்கு பேரும் கடந்த 12 ஆம் திகதி விடுவிக்கப்படவிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேகநபர்களால் சிகிச்சை நிலையத்தில் இருந்து மின்னணு உபகரணங்கள் மற்றும் வேறு உபகரணங்கள் சில திருப்பட்டுள்ளதாக அந்த நிலையத்திற்கு பொறுப்பான வைத்தியர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.