Header Ads



கொரோனாவால் 37 நாட்களில் 122 பேர் மரணம்


இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 37 நாட்களில் (நவம்பர் 01 முதல் டிசம்பர் 07 வரை) 122 பேர் மரணமடைந்துள்ளனர்.

அதேவேளை, நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் நேற்றிரவு வரை 25 ஆயிரத்து 25 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் (ஒக்டோபர் 22 முதல் நேற்று வரை) 129 பேர் பலியாகியுள்ளனர்.

மினுவாங்கொடை கொத்தணி மூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொட கொத்தணிமூலம் 21 ஆயிரத்து 259 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 703 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, இலங்கையில் நேற்று வரை மொத்தமாக 28 ஆயிரத்து 580 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 20 ஆயிரத்து 804 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றும் இருவர் உயிரிழந்தார். இதன்படி இலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.

No comments

Powered by Blogger.