25 ஆயிரம் கிலோ மஞ்சளினை, சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்
பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யும் விதத்தில் இந்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 25 ஆயிரம் கிலோ கிராம் மஞ்சளினை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 19 மில்லியன் ரூபா பெறுமதியான மஞ்சள் தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த மஞ்சள் அடங்கிய கொள்கலன்கள் புறக்கோட்டையை சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு சொந்தமானவை என தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment