20 நாள் குழந்தையை எரிக்க விடமாட்டோம் - பெற்றோர் திட்டவட்டம் (உம்மாக்கும், வாப்பாக்கும் நெகட்டிவ்)
கொழும்பு 15 முகத்துவாரம் - பெர்குசன் வீதியைச் சேர்ந்த எம்.எஸ்.எம். பாஹிம் என்பவரது 20 நாட்கள் ஆன, குழந்தை (ஷாயிக்) இன்று செவ்வாய்கிழமை -08- கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளது.
அதேவேளை குழந்தையின் உடலை எரிக்க கையொப்பம் வைக்க மாட்டோம் என்று, அந்தப் குழந்தையின் பெற்றோர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இதுகுறித்து மேல் மாகாண முன்னாள் ஆளுநர், ஆசாத் சாலி குறிப்பிடுகையில்,
குழந்தைக்கு ஆரம்பத்தில் பீசீஆர் எடுக்கும் போது, கொரோனா தொற்று இருக்கவில்லை. மாலையில் பரிசோதிக்கும் போது பொசிட்டிவ் என வந்துள்ளது. மேலும் குழந்தையின் பெற்றோருக்கு நெகட்டிவ் வந்துள்ளது என்றார்
மரணங்கள் பெ.ரும் சந்தேகமாக இருக்கின்றது. நிச்சயமாக போஸ்ட்மாட்டம் பண்ணப்பட வேண்டும். அரச உயர்மட்டத்திற்கு சம்பந்தப்பட்ட தலைவர்கள் இதை கொண்டுசெல்ல வேண்டும்..
ReplyDeleteஇதற்கிடையில் "சுதர்ஷன பாணி ௮லை"யும் ௨௫வாகுமோ? இன்னும் ௭த்தனை ௨டல்களோ??!
ReplyDelete