அரசியல் பழிவாங்கல்களை ஆராயும் 2,043 பக்கங்களை கொண்ட, அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, அந்த அறிக்கையை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் இன்று (08) முற்பகல் கையளித்துள்ளார்.
மூன்று தொகுதிகளாகவுள்ள குறித்த விசாரணை அறிக்கை 2,043பக்கங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.
5 வருஷத்துக்கு பிறகு சும்மாதான் இருப்பார்... கண்டிப்பா வாசிப்பார்
ReplyDelete