அவசரமாகக் கூடிய மு.கா. அதி உயர்பீடம் – ’20’ ஐ ஆதரித்தோர் குறித்து ஆராய்வு, காரணங்களை வாய்முலமாக கூறிய 4 Mp க்கள்
இதற்கான முக்கிய நோக்கம் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தித்திற்கு ஆதரவாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் வாக்களித்ததன் தொடர்பிலும், அதன் பின்னரான அவர்களின் நடவடிக்கை தொடர்பிலும் விளக்கம் கோருவதற்காகும்.
தலைவர் இதற்கான அவசியத்தை வலியுறுத்தியதன் பின்னர் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக், ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் தாம் அவ்வாறு நடந்து கொண்டற்கான காரணங்களை வாய்முலமாக கூறினர். இதுபற்றி ஆராயப்பட்ட போது கட்சியின் அதிஉயர்பீட உறுப்பினர்களும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்த விடயத்தில் முக்கியமான முடிவை மேற்கொள்வதற்கு, உரிய காரணங்கள் எழுத்து மூலம் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தலைவருக்கும், செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர், பிரஸ்தாப பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் மீதும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கட்சி முடிவெடுக்கும்.
கள்ள நாய்கள் இப்ப சமூகத்த ஏமாற்ற பார்க்கிரானுகள்
ReplyDeleteகோவிட்-19ஐ விடவும் கோவின்-20(கோட்டாபயவின்20)முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தான வைரஸ் ஆகும். எனவே அதை புரியாமல் கோவின்-20 க்கு ஆதரவளித்த மூ.சிலிம்பாஉகள் அனைவரும் வரலாற்று துரோகத்தை செய்த துரோகிகளாவார்கள். காரணம் கோவிட்-19 ஓரிரு ஆண்டுகளில் முடிந்து சாதாரன நிலைக்கு வந்து விடும். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான கோவின்-20 வைரஸ் 5 ஆண்டுகள் வரை முஸ்லிம்களை தாக்குமா அல்லது 10 ஆண்டுகள் வரை நீடிக்குமோ என்பது கேள்விக்குறியாகும்.
ReplyDeleteஇன்றைய சூழலில் எமது அரசியல் வாதிகள் எந்த கட்சி அல்லது யாருடைய கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக தம் சமூகத்துக்காக பாராளுமன்றத்தில் உள்ளும் புறமும் பலமாக குரல்
ReplyDeleteகொடுக்க வேண்டும்.அதிலும் ஆளும் கட்சியான பொது ஜனபெரமுனையை பலமாக விமர்சித்து மக்களிடையே வாக்குப்பெற்றவர்கள் அதிலிருந்து மாறி அரசுடன் சங்கமிக்க முயற்சிப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.எனவே இவர்கள் சமூகத்தின் அநீதி களையும், தேவைகளையும் சுட்டிக்காட்டி குரல் எழுப்ப வேண்டும்.அதேவேளை ஆளும் தரப்பில் தெரிவு செய்யப்பட்ட MP
க்கள் இவைகளுக்கான தீர்வுகளை பெற முயற்சிக்க வேண்டும்.இதைவிடுத்து இரு தரப்பினரும் தங்களின் சுய தேவைகளை முற்படுத்தி செயல்பட முனைவது சமூகத்தை நிர்க்கதியாக்கிவிடும்.இதனால் ஏற்படும் பின்விளைவுகளை சிந்திக்க கடமைப்பட்டவர்களும்
எமது அரசியல் வாதிகளே.