Header Ads



அக்கரைப்பற்றை 2 மாதங்களுக்கு முடக்கப் போகிறார்களா..?


அக்கரைப்பற்று சந்தையுடன் தொடர்புடைய கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுககுணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மெட்ரோ நியூஸுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அக்கரைப்பற்று சந்தையுடன் தொடர்புடைய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று (04) வரை மேலும் அதிகரித்தே காணப்படுகிறது.

இவ்வாற நிலைமை அங்கு தொடர்வது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல. சுகாதாரத்துறையினரும் பாதுகாப்புப் பிரிவினரும் கொரோனா தொற்றை ஒழிப்பதற்கான முயற்சிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

இந்தப் பிரதேச மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  சில உள் வீதிகளில் சிலர் தொடர்ந்தும் தங்களது வர்த்ததக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது எமது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல.

இவ்வாறான நிலைமை தொடரும் பட்சத்தில் குறித்த பகுதிகளை விடுவிப்பது தொடர்பில் சாதகமான தீர்மானங்களை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்படலாம்.

விரைவாக இந்தப் பகுதிகளை விடுவிக்கவே நாம் முயற்சித்து வருகிறோம். ஆனால் ஒரு சிலரின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக குறித்த பிரதேசங்களை 2 வாரங்கள் அல்ல  2 மாதங்களுக்குத் தொடர்ந்தும் தனிமைப்படுத்த வேண்டி வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Metro

No comments

Powered by Blogger.