Header Ads



19 ஜனாஸாக்கள் பிரேத அறையில் உள்ளன - சுகாதார தரப்பு முடிவெடுக்க முடியாத நிலை, அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவில்லை என்கின்றனர்

 (எம்.எப்.எம்.பஸீர்)

கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்த 19 பேரின் சடலங்கள் இன்று (08) மாலையாகும்போதும் , கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

பல நாட்களாக இந்த சடலங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் சுகாதார தரப்பு, குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவில்லை என தெரிவிக்கிறது.

இந்நிலையில் உறவினர்கள் பொறுப்பேற்க மறுக்கும்      கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் சுகாதார தரப்பினர் இறுதி முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

5 comments:

  1. innalillahiwainnailaihirojiun

    ReplyDelete
  2. அரசுக்கும் சுததாரத் தரப்புகும் இந்த விடயத்தில் தொடர்பில்லை என அரசு கைவிரிக்க, சுகாதாரத்தரப்பு அரசின் அனுமதிக்காக காத்திருக்க, இலங்கையின் மக்கள் கையில் ஒன்றுமே இல்லை. ஏன் மக்களே அரசாங்கத்திடம் கையேந்தி நிற்கும் நாடு. என் உயிர் பூமி. இலங்கை.

    ReplyDelete
  3. Government and Health authority...Each one passing the ball...

    Simply wanted to hurt the muslim community due to the racism in their hearts..

    We raise our hands to The ONE TRUE GOD who created us and them to reply them in suitable manner in both worlds.

    Ya Allah we stay patience and pray you alone... relieve us from this pain..

    ReplyDelete
  4. இந்த நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்வது அரசியல்வாதிகள் தான். காரியாலயத்தில் குளிரூட்டியில் இருந்துகொண்டு கட்டளையிட்டால் இந்த நாட்டு மக்களை இன்னும் ஏமாற்றலாம் என கனவுகாணும் இந்த போக்கிரிகளுக்கு நாட்டு மக்கள்தான் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    ReplyDelete
  5. மிகச்சரியான தீர்வு இந்த அனைத்து மையத்துக்களையும் அந்த போக்கிரி குழுவின் ஒவ்வொருவரின் வீட்டும் ஒவ்வொன்றாக அனுப்பிவைத்தால் பிரச்சினை முடிந்துவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.