Header Ads



14 ஜனாஸாக்கள் காத்திருப்பு - தகனம் செய்வதற்கோ, பெட்டி வழங்கவோ உறவினர்கள் மறுப்பு


கொரோனா தொற்றால் இறந்த நபர்களின் உடல்களை உறவினர்கள் பொறுப்பேற்காத காரணத்தினால் சுகாதார துறையினர் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக இறந்த நபர்களின் 14 சடலங்கள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்குரிய பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சடலங்களை உறவினர்கள் பொறுபேற்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மொத்தமாக 28 ஆயிரத்து 580 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 20 ஆயிரத்து 804 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 7 ஆயிரத்து 634 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3 comments:

  1. அரச செலவில் பொறுப்பேற்கத ஜனாஸாக்களை தகனம் செய்ய போவதாக தெரிவித்தார்கள். இதை பிரசுரித்த அநேக ஊடகங்கள் இப்போது ஜனாஸாக்கள் காத்திருப்பதாக அறிவிக்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை.

    ReplyDelete
  2. innalillahiwainnailaihirojiun

    ReplyDelete
  3. This government and president were brought to the power out of extream racism and anti Muslim propaganda with a great expectation of development of country . President was called as king dutugemunu. But see what this government and president are doing and busy with what. Finally they spent the full time on cremation of our muslims bodies. What I feel this as a great punishment from the Allah which is unnoticed by most .

    ReplyDelete

Powered by Blogger.