நிவாரண பொதிக்குப் பதிலாக 10,000 ரூபா பணமாக வழங்க வேண்டும் - சஜித் கோரிக்கை
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
அரசாங்கத்தினால் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா பெருமதியான நிவாரணப்பொதியில் பாவனைக்கு உதவாத பொருட்கள் இருப்பதாகவும் 10ஆயிரம் ரூபாவுக்கு பெருமதியான பொருட்கள் இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால் உணவுப்பொதி வழங்குவதற்கு பதிலாக 10ஆயிரம் ரூபா பணமாக வழங்கவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து, நாட்டில் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா பெருமதியான உணவுப்பொருட்கள் தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கும் பிரதேசங்களை அரசாங்கம் தனிமைப்படுத்தி வருகின்றது. அவ்வாறு தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்களில் இருக்கும் வீடுகளுக்கு அரசாங்கத்தினால் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப்பொதி வழங்கி வருகின்றது.
இவ்வாறு வழங்கப்படும் உணவுப்பொதி 10ஆயிரம் ரூபா பெறுமதி என தெரிவிக்கப்படுகின்ற போதும் 7ஆயிரம் ரூபாவுக்கு பெறுமியான பொருட்களே அதில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியபோதும் மக்களுக்கு தெளிவான பதில் கிடைப்பதில்லை.
அத்துடன் வழங்கப்படும் பொருட்களில் அதிகமானவை பாவனைக்கு எடுக்கமுடியாமல் இருப்பதாக மக்களிடமிருந்து எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
குறிப்பாக கடளை, பருப்பு, கிழங்கு மற்றும் வெங்காயம் என்பன பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று குறித்த உணவுப்பொதியில் உள்ளடக்கப்படுள்ள பொருட்கள் மற்றும் பிரமானம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டு பட்டியல் ஒன்றும் அதில் இருக்கின்றது.
ஆனால் சில பொதிகளில் பட்டியலில் இருக்கும் பொருட்கள் பொதியில் இல்லை. அல்லது தெரிவிக்கப்பட்டிருக்கும் நிரை குறைவாக இருக்கும்.
இவ்வாறு பல குற்றச்சாட்டுக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களிடமிருந்து பல குற்றச்சாட்டுக்கள் வருகின்றபோது அதற்கு முறையான பதில் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் 10ஆயிரம் ரூபா பெருதமதியான உணவுப்பொதி வழங்குவதற்கு பதிலாக அந்த குடுபங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பணமாக வழங்க நடவடிக்கை எடுத்தால் மக்களிடமிருந்து வரும் இந்த குற்றச்சாட்டுக்களை தவிர்க்கலாம். அத்துடன் அந்த மக்களுக்கு தேவையான பொருட்களை அவர்களுக்கு தேவையான அளவு பெற்றுக்கொள்ளலாம்.
அதனால் அரசாங்கம் இதுதொடர்பாக கவனத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
Post a Comment